மனஅழுத்தம் (Stress)
மன அழுத்தத்தைக் குறைப்பது எப்படி? இதோ எளிய வழி…!
அதிகமான மனஅழுத்தம்
(Stress) கண்களுக்கு தெரியாது… ஆனால் அதன் விளைவுகள் மிகவும் கவலைக்குரியது…
மனஅழுத்தம் என்பது வெறும் “கவலைப்படுவது” மட்டுமல்ல.
உடல் ஒரு ஆபத்து இருப்பதாக உணரும்போது அது வேலை பற்றிய கவலையாக இருந்தாலும், வீட்டுச் சிக்கலாக இருந்தாலும் உடலில் ஒரு அவசர அலாரம் இயங்கத் தொடங்கும்.
அந்த அலாரம் காரணமாக: இதயம் வேகமாக துடிக்கும். தசைகள் இறுக்க மாகும். உடல் கோர்டிசோல்
(Cortisol) மற்றும் அட்ரினலின் (Adrenaline) போன்ற ஹார்மோன்களை வெளியிடும்
இவை உடலை உடனடி செயலுக்கு தயார் செய்யும். இது சில நேரம் மட்டுமே இருந்தால் நல்லது.
உண்மையில் மனஅழுத்தம் முழுவதும் கெட்டது அல்ல . சில அளவில் அது தேவையானதே. ஆனால் பிரச்சனை என்ன தெரியுமா?
அந்த “அலாரம்” ஒருபோதும் ஆஃப் ஆகாமல் இருந்தால் நாம் தினமும் பதட்டத்திலேயே வாழ்ந்தால், உடல் மெதுவாக சோர்ந்து பாதிக்கப்படும். அப்போது தான் பல பிரச்சனைகள் தொடங்கும்.
கோர்டிசோல் அதிகமானால், உடலில் சர்க்கரை அளவு உயரலாம் — உடல் அவசர ஆற்றலை உருவாக்குவதால். டிரைகிளிசரைட்ஸ் மற்றும் ரத்த அழுத்தம் கூட அதிகரிக்கலாம் . இதயம் அதிகமாக வேலை செய்வதால். தன்னறியாமல் பற்களை இறுக்கும் பழக்கம்
(Bruxism)
தசை வலி, தலைவலி, செரிமானம் பாதிப்பு , உடல் “உயிர் காப்பது” முக்கியம் என்று நினைத்து செரிமானத்தை குறை க்கும். நீண்டகால மனஅழுத்தம் இருந்தால் முடி உதிர்வும் அதிகரிக்க லாம்.
மேலும் மூளை தொடர்ந்து அவசர நிலையில் இருந்தால் அது சோர்ந்து விடும்.
மன சோர்வு, கவனம் செலுத்த சிரமம், மனநிலை மாற்றங்கள், நன்றாக தூங்க முடியாமை, ஓய்வு எடுத்தாலும் ஓய்வாக உணர முடியாமை.
இதன் செய்தி தெளிவானது: சிறிதளவு மனஅழுத்தம் உதவும்… ஆனால் அதிகமான மனஅழுத்தம் நோய்களை உண்டாக்கும்.
ஆழமாக சுவாசிப்பது, உடலை இயக்குவது, போதுமான ஓய்வு எடுப்பது, நம்முடைய உணர்வுகளை பகிர்ந்து பேசுவது இவை எல்லாம் ஒரு ஆடம்பரம் அல்ல
உடலின் இயல்பான சமநிலையை மீண்டும் பெற வேண்டியது அவசியம்.
No comments:
Post a Comment