Followers

Sunday, August 9, 2026

தேசிய காய்கறி

இந்தியாவின் தேசிய காய்கறி எது தெரியுமா?



இந்தியாவின் தேசிய கீதம், தேசிய விலங்கு, பறவை, பூக்கள் என பலவற்றை அறிவோம்.

ஆனால் தேசிய காய்கறி பற்றி அதிகம்பேர் அறிந்திருக்க மாட்டோம்.

இந்த ஆரஞ்சு நிற காய்கறி இனிப்பு சுவை கொண்டது. இந்த காய்கறியில் பல வகை சமையல் செய்யப்படுகிறது.

இனிப்பு சுவை கொண்ட இந்த காயை பயன்படுத்தி அல்வா முதலியன செய்யப்படுகிறது.

மஞ்சள் பூசணி இந்தியாவின் தேசிய காய்கறி ஆகும்.

இது இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது.இதற்கு வளமான மண் தேவை இல்லை.

மஞ்சள் பூசணி பரங்கிக்காய் எனவும் அழைக்கப்படுகிறது.

விலை அதிகம் இல்லாவிட்டாலும் தரமான பொக்கிஷம் இந்த பூசணி.

வைட்டமின் '' நிறைந்த இந்த பூசணி உடலுக்கு மிகவும் நன்மை செய்வதாகும்.

மலச்சிக்கல் பிரச்னையை நீக்கவும், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கவும் இந்த காயை நாம் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த காய்கறி பல்வேறு வகை வைட்டமின்ககளின் களஞ்சியமாக உள்ளது

No comments:

Post a Comment