சுக்கு
சுக்கு மருத்துவ குணங்கள்: சுக்கிற்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, சுப்ரமணியனுக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை என்பது அந்த முன்னோர் வாக்கு. அது போல் சுக்கு இருந்தால் உங்களுக்கு நோய் என்ற பகைவன் இருக்காது. காலையில் இஞ்சி, மதியம் சுக்கு, இரவில் கடுக்காய் என தினமும் இந்த மூன்றையும் ஏதோ ஒரு வகையில் அன்றாடம் சேர்த்துக் கொண்டால் நோயே நம்மை நெருங்காது.
சுக்கு எந்த வகையான உணவையும் செரிமானம் அடைய செய்துவிடும். உடலில் உள்ள நச்சுக்களை முறித்துவிடும்.
குடல்களையும், உணவுப் பாதையையும் சுத்தமாக்கும் .1. மூட்டுவலியை
குணமாக்கும் சுக்குடன் சிறிது பால் சேர்த்து அரைத்து, அதை நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறியவுடன், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமடையும்.
2.பித்தத்தை போக்கும்
சுக்கைத் பொடி போல தூள் செய்து, சிறிது எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்து வந்தால் உடலில் உள்ள பித்தம் தீரும்.
3.சளியை விரட்டும்
சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவை அனைத்தையும் கஷாயம் போல செய்து பருகி வந்தால், கடுமையான சளி இருந்தாலும் மூன்று நாட்களில் குணமாகும். 4.தலைவலியை விரட்டும் சுக்குடன் சிறிது நீர் சேர்த்து சிறிது விழுது போல அரைத்து, நெற்றியில் தடவி வந்தால் தலைவலி தீரும்.
5.உடலுக்கு சுறுசுறுப்பை தரும்
சுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து, ‘‘சுக்கு நீர்’’ காய்ச்சிக் குடித்து வந்தால் உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு
உண்டாகும்
6.வாயுத்தொல்லை போக்கும்
சுக்கு சிறிது எடுத்து அதை ஒரு வெற்றிலையுடன் சேர்த்து மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும். 7.விஷக்கடிகளை குணமாக்கும்
தேள், பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் கடித்துவிட்டால் கொஞ்சம் சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் நீர் குடித்தால் விஷம் முறியும்..
No comments:
Post a Comment