Tuesday, April 2, 2019

8 -ஆம்இடப்பொருத்தம் - ஜாதகப்பொருத்தம்


8 -ஆம்இடப்பொருத்தம் - ஜாதகப்பொருத்தம்

பெண் ஜாதகத்தில் லக்கினத்தில் இருந்து 8 ஆம் வீட்டில் சனி ,சூரியன், செவ்வாய் ஆகிய பாபகிரகங்கள் இருந்தால் ஆண் ஜாதகத்திலும் 8 ஆம் வீட்டில் சனி, சூரியன், செவ்வாய் இருக்கவேண்டும். அப்படி இருந்தால் பொருத்தம்உண்டு,

பெண் ஜாதகத்திலோ அல்லதுஆண்ஜாதகத்திலோ ஒருவர் ஜாதகத்தில் மேலே குறிப்பிட்ட பாபகிரகம் 8 ஆம்வீட்டில் இருந்து மற்றவர்ஜாதகத்தில் இல்லை என்றால் பொருத்தம் இல்லை.

விதிவிலக்கு :

சனி,சூரியன்,செவ்வாய் 8 ஆம் வீட்டில் ஒருவர் ஜாதகத்தில் இருந்து மற்றவர் ஜாதகத்தில் இல்லை என்றால் 8 ஆவது வீட்டில் கிரகங்கள் இல்லாதவர் ஜாதகத்தில் லக்கினத்தில் இருந்து 2, லக்கினத்தில் இருந்து 4 லக்கினத்தில் இருந்து 12 ஆகிய ஏதாவது ஒருஇடத்தில் குருகிரகம் இருக்க வேண்டும்.

அவ்வாறு இருந்தால் குருபார்வை உள்ளதால் பொருத்தம் சுமார்.

No comments:

Post a Comment