வயிற்றுப்போக்கு
அறிகுறிகள் |
சாத்தியமான காரணங்கள் |
நடவடிக்கைக்கான ஆலோசனை |
வெளிப்படையான காரணமின்றி
திடீர் வயிற்றுப் போக்கு |
வைரல் தொற்று |
சிலநாட்களில் பிரச்சினைகள்
அகன்றுவிடும் |
சில உணவுகளை உண்ட பின்
வயிற்றுப்போக்கு |
உணவு ஒவ்வாமை |
அவ்வுணவை உண்ண வேண்டாம் |
உணவுக்குப் பின் 2-6 மணி
நேரத்தில் தொடங்கும் வயிற்றுப்போக்கு |
கெட்ட, சரியாக சமைக்கப்படாத,
அசுத்த உணவால் ஏற்பட்ட பாக்டீரியா தொற்று |
பிரச்சினை சில நாட்களில்
தீரும். மலம் இயல்புநிலையை அடையும் வரை கட்டியான உணவைத் தவிர்க்கவும். |
அயல் நாட்டில் பயணம்
செய்யும்போது வயிற்றுப்போக்கு |
பெரும்பாலும்
பாக்டீரியாக்களால் அசுத்தமான தண்ணீர் மூலம் உண்டாகும் தொற்று |
பொதுவாகப் பிரச்சினை 1-2
நாட்களில் தீர்ந்துவிடும். வாந்தி, தலைவலி போன்ற பிற அறிகுறிகளுடன் மேலும்
தொடர்ந்தால் மருத்துவரை உடனடியாக அணுகவும். |
4 வாரங்களுக்கு மேலாக
நீடிக்கும் வயிற்றுப் போக்கு |
கிரோன் நோய், லாக்டோசை ஏற்காததால்
ஏற்படும் குடல் எரிச்சல் போன்ற நாட்பட்ட நோய்கள் |
மருத்துவர் உணவுக்குழாய்
நிபுணர் ஆலோசனையை நாடலாம். |
No comments:
Post a Comment