காய்ச்சல்
அறிகுறிகள் |
சாத்தியமான காரணங்கள் |
நடவடிக்கைக்கான ஆலோசனை |
பிற அறிகுறிகள் இல்லாமல்
சிறிதளவு காய்ச்சல் |
உடல்பயிற்சி, மாதவிடாய்,
மிகையாக ஆடையணிதல், வெப்பம் |
இயல்பான உடல் வெப்பம் 98.6 F |
மூக்கொழுகுதல், தொண்டைவலி,
இருமல், காது வலி, வாந்தி, வயிற்றுப்போக்குடன் மிதமான காய்ச்சல் (100.5-104.5 F) |
சளி காய்ச்சல், தொண்டை காது
தொற்றுநோய், மூச்சுக்குழாய் அழற்சி அல்லது சிறுநீரகப் பாதைத் தொற்று நோய் |
இபுபுரூபன் போன்ற மருந்துகள்
காய்ச்சலைக் குறைக்கும். மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால்
மருத்துவரை அணுகவும். |
மனக்குழப்பம், கழுத்து
விறைப்பு, மூச்சுவிட கடினம், மாயத்தோற்றங்களுடன் அதிகக் காய்ச்சல் |
வைரல் அல்லது பாக்டீரியா
தொற்று, சிறுநீரகத் தொற்று அல்லது வேறு அபாயகரமான பிரச்சினை |
நோயாளி மந்தமாகவும்,
செயலற்றும் இருந்தால் அவசர சிகிச்சைக்கு செல்லவும். அல்லது மருத்துவரை அணுகவும். |
புதிய மருந்து உட்கொண்டவுடன்
காய்ச்சல் |
நுண்ணுயிர்க்கொல்லிகள்,
ஒவ்வாமை எதிர்ப்பு, எதிர்வலிப்பு, இரத்த அழுத்த மருந்துகள் போன்றவற்றின்
பக்கவிளைவுகள் |
மருத்துவருடன் பேசி மருந்தை
மாற்றவும். |
தடுப்பு மருந்து எடுத்த பின்
லேசான காய்ச்சல் |
தொண்டை அழற்சி, நரப்பிசிவு,
நிமோனியா நோய்களுக்கான தடுப்பு மருந்துகளுக்கு பக்க விளைவு |
ஓரிரு நாட்களில் காய்ச்சல்
பொதுவாகக் குறையும் |
வெப்பம், அல்லது சூரிய ஒளி
அதிகம் பட்ட உடன், நாடித் துடிப்பு அதிகமாதல், குமட்டல் மற்றும் தன்னிலை
இழத்தலுடன் உடல் வெப்பம் அபரீதமாக அதிகரித்தல் |
வெப்பத்தாக்கம் |
குளிர்ச்சியான இடத்துக்குச்
செல்லவும். தண்ணீர் அருந்தவும். அறிகுறிகள் நீடித்தால் மருத்துவ ஊர்தியை
அழைக்கவும் |
எடை குறைவு, தசை, மூட்டு,
வயிற்று வலி |
புற்று, பெருங்குடல் புண்,
கிரோன் நோய், எச்.ஐ.வி/எய்ட்ஸ், தன்தடுப்பாற்றல் நோய் |
மருத்துவரை அணுகவும் |
No comments:
Post a Comment