Saturday, October 31, 2020

தாமோதர லீலை!!

 


தீபா­­ளிக்கு முன்னர் வரும் பௌர்­­மியில் இருந்து அடுத்து வரும் பௌர்­ணமி வரை­யுள்ள மாதத்தை தாமோ­தர மாதம் என்றும், மாலைப் பொழுதில் நெய் தீபம் ஏற்றி, சுவை­யான பண்­டங்­களை தயா­ரித்து நிவே­தனம் பண்ணி, தாமோ­­ராஷ்­டகம் எனும் எட்டு பாடல்­களை பாடி வழிபடுகின்றனர்.

பக்­தி­யு­டை­­வர்­­ளுக்கு மிக எளி­தாக அடை­யப்­­டக்­கூ­டி­யவன். அல்­லா­தோ­ருக்கு அடைய முடி­யா­தவன். எல்­லோரும் விரும்பும் மலர்­­­ளான இலக்­கு­மியால் விரும்­பப்­­டு­பவன். அவளின் தலைவன். அப்­­டிப்­பட்­டவன் கடைந்­தெ­டுத்த வெண்­ணெய்யை திரு­டி­­தற்­காக கட்­டுப்­பட்டான்.

அதுவும் வயிற்­றிலே கட்­டுப்­பட்­டுள்ளான்?

அந்த வயிறு எப்­­டிப்­பட்­டது?

ஊழிக் கா­லத் தில் அத்­தனை உயிர்­­ளையும் தன்­னுள்ளே அடக்கி சிருஷ்­டிப்புக் காலத்தில் பிறப்­பிக்க வைப்­பது. அந்தோ என்ன எளிமை அன்­னை யின் பிடிக்­குட்­பட்டு கட்­டுப்­பட்டான் அவன் கயிற்றால் கட்­டப்­­­வில்லை தாய்ப்­பா­சத்­தினால் கட்­டுப்­பட்டான்.

தீபா­­ளிக்­காலம் அன்னை யசோதை ஒருநாள் அதி­காலை அடுப்பில் பாலை வைத்துவிட்டு தயிர் கடையும் பணியில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருந்தாள். கண்ணன் வந்து மடியில் ஏறி பால் குடிக்க வேண்­டு­மென்றான். வயிறு நிரம்­­வில்லை. அவனை விட்டுவிட்டு அடுப்பில் இருந்த பாலை கவ­னிக்க ஓடினாள்.

கண்­­ணுக்கு கோபம் வந்து விட்­டது. தயிர்ச்­சட்­டியை உடைத்து விட்டு உறியில் இருந்து வெண்­ணெய்யை எடுத்துக் கொண்டு ஓடிச்­சென்று உரலைக் கவிட்டு வைத்து அதன் மேல் உட்­கார்ந்து கொண்டு குரங்­கு­­ளுக்கு வெண்­ணெய்யை ஊட்­டிக்­கொண்­டி­ருந்தான்.

அன்னை திரும்பி வந்து தயிர்ச்­சட்டி உடைந்­தி­ருப்­­தைக்­ கண்டு, “இது என் கிருஷ்­ணனின் வேலை­யா­கத்தான் இருக் கும்என்று கையில் தடியைக் கொண்டு அவனைத் தேடிச்சென்றாள். அன்­னையின் கையில் தடி­யைக்­கண்டு பயந்­தவன் போல் ஓடத் தொடங்­கினான். அனை­வரும் கண்டு அஞ்சும், யமனே பயப்­படும் எம்­பெ­ருமான் கண்ணன் அன்­னையின் கரங்­களில் இருக் கும் தடிக்குப் பத­றிப்போய் ஓடினான்.

அன்­னையும் ஓடினாள். யோகி­­ளாலும் ஞானி­­ளா­லுமே பிடிக்க முடி­யாத கண்­­­­மாத்­மாவை அவளால் பிடிக்க முடி­­வில்லை. களைத்­துபோய் விட்டாள். அன்­னைக்கு இரங்கி இறு­தியில் தானே பிடி­பட்டான்.

உன் குறும்­புக்கு உன்னைக் கட்­டிப்­போ­டு­கிறேன் பார்என்று கயிற்றை எடுத்தாள். கயிறு இரண்டு அங்­கு­லத்தால் குறைந்­தது வேறு கயி­று­­ளையும் முடிச்சுப்போட்டு கட்­டினாள். ஒவ்­வொரு முறையும் அது இரண்டு அங்­கு­லத்தால் குறைந்­தது. கோபி­களும் அன்­னையும் அதி­­யித்­தார்கள்.

இவ­னைக்­கட்ட முடி­யாது என்று விட்ட போது, “அம்மா என்னைக் கட்டுஎன்று கூறி­னாரே அந்தப் பரம்­பொருள் கண்ணன். உடனே கட்டக் கூடி­­தாக இருந்­தது. வயிற்­றிலே கட்­டப்­பட்டு தாமோ­தரன் எனும் பெய­ரையும் பெற்றார். தாய்ப் பாசத்­தினால் கட்­டுண்ட தாமோ­தர லீலையை நினைக்கும் போது என்ன தோன்­று­கி­றது?

கீதையில் வேதங்­களைக் கற்­­தாலோ, கடுந்­­வங்­களைச் செய்­­தாலோ தானங்­களைக் கொடுப்­­தாலோ, வழி­பாடு செய்­­தாலோ என்னை உள்­­படி உணர முடி­யாது; அடை­­மு­டி­யாது;

கலப்­பற்ற பக்தித் தொண்­டி­னாலே மட்டும் தான் என்னைப் பற்­றிய உண்­மையை உண­ரவும், என்னை அடை­யவும் முடியும் என்று காட்டுகிறான் நமக்கு!!

தூய அன்­பினால் மட்­டுமே அவனைப் பிடிக்­கவும் நம்முடன் இணைக்­கவும் முடியும் என்­பது தெளி­வா­கி­றது

ஒவ்வொரு வீடுகளிலும் இது கொண்டாடப்பட வேண்டியது. அனுஷ்டித்து அனுபவிக்க வேண்டிய லீலை தாமோதர லீலை.

ஹரே கிருஷ்ண கிருஷ்ணா!!

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !

No comments:

Post a Comment