Thursday, October 15, 2020

மின்சார ரயிலை இயக்க நான்கு சாவிகள் தேவை!

 

                   சென்னை: ஒரு மின்சார ரயிலை இயக்குவது என்பது எளிதான ஒன்றல்ல. நான்கு சாவிகளைக் கொண்டு இந்த ரயில் இயக்குகிறது. எக்ஸ்பிரஸ் ரயில்களைப் போல மின்சார ரயிலை சுலபமாக இயக்க முடியாது. மின்சார ரயில்களை இயக்க மொத்தம் நான்கு சாவிகள் உண்டு. ரிவர்சர் கீ, எனர்ஜிங் கீ, டெட்மேன் கன்ட்ரோல் கீ, பிரேக் பிரஷர் கீ என நான்கு சாவிகளை இயக்கியாக வேண்டும். நான்கையும் சரியாக பொருத்த வேண்டும். ஒரே சீராக இவற்றை இயக்க வேண்டும். அப்போதுதான் ரயில் சீராக செல்லும். ஒரு டிரைவரைக் கொண்டு மட்டுமே ரயில் இயக்கப்படுகிறது என்பதால் இந்த நான்கில் ஏதாவது ஒன்றை சரியாக இயக்காவிட்டாலும் கூட தானாகவே பிரேக் போட்டு ரயில் நின்று விடும்.

               குறிப்பாக ரயிலைக் கிளப்பும் பட்டனை அழுத்தம் கொடுத்து அமுக்க வேண்டுமாம். அப்போதுதான் வண்டி நகருமாம். இல்லாவிட்டால் என்ன செய்தாலும் வண்டி நகராமல் நின்று விடுமாம்.

No comments:

Post a Comment