Friday, October 16, 2020

மாம்பழமாம் மாம்பழம்

 


                                 மாம்பழத்தின் தாயகம் தெற்கு ஆசியா.இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசியப்பழம். பங்களாதேஷின் தேசிய மரம் மாமரம்.
*    
சில மாமரங்கள் 300 ஆண்டுகள் கழிந்த பின்பும் காய்க்கின்றன.
*    
உலகில் 500 வகையான மாம்பழங்கள் உள்ளன. இந்தியாவில் 283 வகைகள் உள்ளன. இவற்றில் 30  மட்டுமே பிரபலம். பாகிஸ்தானில் 70 வகைகள் உள்ளன.
*    
மாம்பழம் 5-25 சென்டிமீட்டர் நீளமும், 140 கிராம் முதல் 2 கிலோ வரையிலும் எடை இருக்கும்.
*    
உலக மொத்த மாம்பழ உற்பத்தியில் பாதிக்கு மேல் இந்தியாவில் தான் உற்பத்தியாகிறது. அடுத்து சீனாமூன்றாவது தாய்லாந்து. ஆனால் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாவது ரொம்ப குறைச்சல். மாறாக உற்பத்தியானதில்  பெரும்பாலானவற்றை இந்தியர்களே சாப்பிட்டு விடுகின்றனர்.
*    
மாம்பழங்களின் மன்னன் என அழைக்கப்படும் பழம் அல்போன்சா!
*
அக்பர், மாம்பழம் சாப்பிடுவதில் மிகவும் பிரியமுடையவர். அதனால் கிழக்கு இந்தியாவில், தர்பங்கா என்ற இடத்தில்பெரிய அளவில் ஒரு லட்சம் மாமரங்களை பயிரிட்டு, ஏராளமான மாம்பழம் கிடைக்க வசதி செய்தார்.

 பானங்களில் மாம்பழ பானம் மிகவும் பாப்புலர். ப்ராண்டெட் மாம்பழ சாறுகள் மக்களிடையே இன்று மிகவும்  பிரபலம்.
*    
கர்நாடகா, ஆந்திரா-தெலுங்கானாவில் உகாதி என்றாலே மாம்பழ பச்சடி நிச்சயம் உண்டு.
*    
தமிழர்கள் மற்றும் தென்னிந்தியர்கள், பண்டிகை காலங்களில் செய்யும் முதல் வேலை, மறக்காமல் வாசல்  அருகே மாவிலைகளை கட்டுவது தான்.
*    
உலகின் மிக மிக இனிமையான மாம்பழமாக 1995-ல் கின்னஸ் புக் ஆஃப் உலக சாதனை புத்தகம்  அறிவித்த மாம்பழம் ‘TanBales’.
*    
மாம்பழம் சாப்பிடுவதால் வைட்டமின் சி மற்றும் நிச்சயம் கிடைக்கும். உடலில் ஊட்டச்சத்து கூடும். ரத்த  அழுத்தத்தை நார்மலாக மாற்றுகிறது. கண்பார்வையை சீராக்கும். எலும்புகளை வலு ஏற்றும்.
*    
உடம்பில் ஏற்படும் வாய், நுரையீரல், வயிறு, மார்பக புற்றுநோய்களை வரவிடாமல் தடுக்கிறது.
*    
உலர்ந்த பழச்சதை மற்றும் கொட்டை ஆயுர்வேத மருத்துவத்தில் மருந்துக்கு பயன்படுத்தப்படுகிறது.
*  
இந்தியாவின் சூப்பர்-10 மாம்பழங்களை அறிந்து கொள்வோம்.
 
அல்போன்சா - மகாராஷ்டிரா
பதாமி, ராஷ்பரி மல்லிகை - கர்நாடகா
சான்சா - வட இந்தியா
தசேரி - உத்தரப்பிரதேசம்
கேசார் - சவுராஷ்டிரா - குஜராத்
லங்கரா - வட இந்தியா
மல்கோவா நீலம் - தமிழ்நாடு
ஹிம்சாகர் - மேற்குவங்காளம்
தோட்டாபுரி - ஆந்திரா
பங்கனபள்ளி - ஆந்திரா.

இவை தவிர இமாம்பசந்த், அமரப்பள்ளி மற்றும் ராஜ்புரி ஆகியவையும் பிரபலம்தான். திருச்சி மாம்பழ சாலையில்  விளையும் இமாம்பசந்த் மிக மிக சுவையானது.
*    
மேற்கு இந்திய தீவுகளில் ‘lets go for a mango walk’ எனக் கூறினால்வா, மாம்பழத் தோப்பு  சென்று, மாங்காயை திருடித் தின்போம்எனப் பொருள்.
*    
ஆஸ்திரேலியாவில் உற்பத்தியான மாம்பழங்களை எடுத்து வந்து முதல் விற்பனையை முழுவதுமாக  நற்காரியங்களுக்கு அன்பளிப்பாக கொடுத்து விடுவர்.
*    
தென்னாப்பிரிக்காவின் உள்நாட்டு விமான நிறுவனம் ஒன்றின் பெயர் ‘mango airlines’. காளிதாசன் மாம்பழத்தை புகழ்ந்து கவி இயற்றியுள்ளான்.
*    
ஊறுகாய் என்றதுமே ஆவக்காய் ஊறுகாய் தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். இது தவிர எண்ணெய்  மாங்காய் ஊறுகாய், மாவடு ஊறுகாய், மாங்காய் தொக்கு, மாங்காய் பிசிறல் மற்றும் மாங்காய் வெந்தயம் ஊறுகாய்  என பல ஊறுகாய்களை செய்து வைத்திருந்து சாப்பிடலாம்.
*    
மாங்காயை பொடிப் பொடியாய் நறுக்கி உப்பு பிசறல் மாங்காய், உரப்பு மாங்காய் என இரு வெரைட்டி  செய்து சாப்பாட்டின் போது சேர்த்து சாப்பிடலாம்.
*    
மாங்காயை நறுக்கி வெல்லம், இஞ்சி, பச்சைமிளகாய் சேர்த்து மாங்காய் ஸ்வீட் பச்சடி தயார் செய்து  சாப்பிடலாம்.
*    
மாம்பழ சாதம் மிகவும் பிரபலம்.
*    
ஆயிரம் சொன்னாலும் பழுத்த மாம்பழத்தை நறுக்கி துண்டு துண்டுகளாக சாப்பிடுவது பலருக்கு பிடிக்கும்வயதானவர்களுக்கோ முழு மாம்பழத்தை அப்படியே கடித்து சாறுடன் ருசித்து சாப்பிடுவது பிடிக்கும்.
*    
மாம்பழத்தை ஒரே சமயத்தில் 3, 4 முழுப்பழம் என சாப்பிடாமல், அளவாக சாப்பிட்டால் ஜீரணத்திற்கு மிக நல்லது. மலச்சிக்கலுக்கு குட்பை சொல்லி விடலாம்.

No comments:

Post a Comment