விளாம் பழம் ஏராளமான மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது.
1. பாம்புக் கடியின் வீரியத்தைக்கூட குறைக்க வல்லது. தசை நரம்புகளை சுருங்கச் செய்யும் சக்தி படைத்தது.
2. தசை வளர்ச்சி, உடல்
வளர்ச்சிக்கான சத்துள்ள பழம். ரத்தத்தை விருத்தி படுத்துவதோடு, சுத்திகரிப்பும் செய்கிறது.
3. விளாம்பழத்தில் ‘வைட்டமின் பி2’ மற்றும் ‘வைட்டமின் ஏ’, சுண்ணாம்புச்சத்து (‘கால்சியம்’) அதிகமாக இருப்பதால் பல், எலும்புகளை வலுவடையச் செய்கிறது.
4. விளாம்பழ மரத்தின் பிசினைத் தொடர்ந்து சாப்பிட்டுவர, பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சினைகள் குணமாகும்.
5. தயிருடன் விளாம் காயைப் பச்சடி போல் செய்து சாப்பிட்டால் வாய்ப்புண், குடல்புண் (அல்சர்) ஆறும்.
6. வெல்லத்துடன் விளாம்பழச் சதையைப் பிசறீ சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி விரைவில் நிவர்த்தியாகும்.
7. விளாம் பழத்துடன் பனங்கற்-கண்டைக் கலந்து சாப்பிட, பித்தக்
கோளாறுகளால் ஏற்படும் வாந்தி, தலைச் சுற்றல் நீங்கும்.
8. தினமும் குழந்தைகளுக்கு விளாம்பழத்தைக் கொடுத்து வர நினைவாற்றல் அதிகரிக்கும்.
விளா மர இலையைத் தண்ணீரில் போட்டு, கொதிக்க வைத்துக் குடிக்க... வாயுத்
தொல்லை மறையும்.
9. விளாங்காயை அரைத்து மோரில் கலந்து குடிக்க. நாள்பட்ட பேதி சரியாகும்.
விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் மலம் இளக்கியாகிறது.
10. விளா மரப்பட்டையைப் பொடித்து தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைக்கவும். இந்தக் கசாயத்தை வடிகட்டிக் குடிக்க வறட்டு இருமல், மூச்சு இழுப்பு, வாய்க் கசப்பு போன்றவை மாறும். பிரசவித்த பெண்களின் வயிற்று உள்ளுறுப்புகளுக்கு
அதிக சக்தி கிடைக்கும்.
11. சர்க்கரையுடன் விளாம்பழத்தைப் பிசைந்து ஜாம் போல் சாப்பிட ஜீரண சக்தி அதிரிகரிக்கும், நன்கு பசிக்கும் ஒவ்வாமை நோய், ரத்தப்போக்கு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும்.
12. பெண்களுக்கு மார்பகம், கருப்பையில் புற்றுநோய் வராமல் தடுக்கும். பழம் நல்ல வலி நிவாரணியாகச் செயல்படுகிறது. ஆரோக்கியத் தின்பண்டமாகவும். பித்த நோய்களைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது.
13. இதன் கொழுந்து இலையை நீரில் போட்டுக் குடித்து வர வாயுத் தொல்லை ஒழியும். பித்தத்தைத் தணிக்கவும் இதன் இலை உதவுகிறது.
14. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாள்கள்
சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்பந்தமான அனைத்துக் கோளாறுகளும் குணமாகும்.
15. பித்தத்தால் தலைவலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா நேரமும் வாயில் கசப்பு, அதிக வியர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில்
ருசி உணர்வு அற்ற நிலை போன்றவற்றை விளாம் பழம் குணப்படுத்தும்.
16. விளாந்தளிர், நாரத்தைத் தளிர், கறிவேப்பிலை, எலுமிச்சை இலை இவற்றைச் சம அளவு எடுத்து உலர்த்திய பொடி, கடலைப் பருப்பு வறுத்து, பொடித்த
பொடி தலா 100 கிராம்,
உப்பு 20 கிராம், மிளகு,
வெந்தயம் தலா 10 கிராம்
கலந்து உணவில் சேர்த்து சாப்பிட பித்தம் குணமாகும். நன்றாகப்
பசி எடுக்கும். வாந்தி
குணமாகும். உடலுக்கு ஊட்டமும் கிடைக்கும்.
17. விளாம் பிசினை உலர்த்தித் தூள் செய்து காலை மாலை தலா ஒரு சிட்டிகை வெண்ணையுடன் கலந்து சாப்பிட வயிற்றுப் போக்கு மங்கையருக்கு வெள்ளைப்படுதல், நீர் எரிச்சல், மேக நோய், உள்ளுறுப்பு ரணம், மாதவிடாய் இம்சை ஆகியவை தீரும். இதற்கு உப்பு இல்லாப் பத்தியம் தேவை.
No comments:
Post a Comment