Tuesday, June 14, 2022

ஆண்டுக்கு ஒரு தங்க நகை கடை எப்படி?

 ஆண்டுக்கு ஒரு தங்க நகை கடை எப்படி?

 

தங்கம் பற்றி விழிப்புணர்வு இல்லை மக்களுக்கு...! சில விளம்பரங்கள் சேதாரம் இத்தனை % என்றும், செய்கூலி இல்லை என்று கூறுகின்றது. உண்மை என்ன ?*

 

 ஒரு பவுன் தங்கசெயினுக்கு 

1.5 கிராம் செம்பு சேர்த்தால் மட்டும் நகை செய்ய முடியும்...!

 இது அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் 

8 தங்கத்தில் 1.5 கிராம் கழித்தது போக 

6.5 கிராம் நகை செய்யப்படுகின்றது...!

 ஆனால் சாமானியன் நகை வாங்கும்போது 6.5 தங்கம் + 1.5 செம்பு இரண்டும் சேர்ந்து 8 கிராம் தங்கமாக பில்லில் போடுகின்றார்கள். அதுமட்டுமின்றி அதற்கு மேலாக சேதாரம் என்று கூறி மேலும் 1.5 கிராம் செம்பை தங்கம் சேர்க்கப்பட்டதாக கூறி செம்பை தங்க விலைக்கு விற்கின்றார்கள்...!

 இதில் நான் சொல்லுவது என்ன 6.5 தங்கம் + 1.5 செம்பு (தங்கமாக) + சேதாரம் செம்பு 1.5 = 9.5 கிராம். ஆக 1 பவுன் நகை வாங்குபவர்கள் வெறும் 6.5 கிராம் தங்கத்தை மட்டும் இல்லாமல் 3 கிராம் செம்பை சேர்த்து விட்டு தங்கத்தின் விலையை போட்டுவிடுகின்றார்கள்...!

 ஆக 1 பவுன் 8 கிராம் நகைக்கு 9.5 கிராமுக்கு நாம் பணம் கட்டுகின்றோம். யாரை ஏமாற்றுகின்றார்கள் நகைக் கடைகாரர்கள் ! ஏழைகளை ஏமாற்றி ஏழைகளின் இரத்தத்தை ஒட்டுண்ணிகளாக உறிஞ்சி எடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள்...!

 ஒருவர் ஒரு புதிய நகைக்கடை திறக்கின்றார் என்றால் ஒரு சில வருடத்தில் பல மாடிகளும் பல ப்ளாட்டுகளையும் வாங்கி குவிக்கின்றார்கள் என்றால் பணம் எப்படி வந்தது ? நான் மேலே சொன்ன கணக்குதான் உண்மை...!

 இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை என்ன ? பவுனுக்கு 3 கிராம் என்று வசூல் செய்யும் போது ஒரு கிராம் செம்பின் விலை என்ன ? கணக்கு போட்டு பாருங்கள்...!

1 கிராம் தங்கம் ரூ. 3765/-

8 கிராம் தங்கம் ரூ. 30,120/-

1 கிராம்  செம்பு - 4.80

1.5 கிராம் செம்பு - 7.20 or 7/-

6.5 கிராம் தங்கம் - 24,472/-

6.5 கிராம் தங்கம் + 1.5 கிராம் செம்பு 

அடக்கவிலை-24,472+7=24,479/-

1 பவுனுக்கு தங்கத்தில் - 30,120 - 24,479 

லாபம்= 5,641

சேதாரம் 1.5 கிராம் = 5647/-

 1 பவுனுக்கு மொத்த லாபம்  11,288                 

 என்ன தலை சுத்துதா ? எனக்குள் ஒரு ஆதங்கம். ஆனால் இந்த விழிப்புணர்வை மக்கள் எப்போது உணர்கின்றார்களோ அன்று தங்கத்தின் விலை கண்டிப்பாக குறையும்...!

No comments:

Post a Comment