Thursday, June 16, 2022

சனாதன தர்மம் என்றால் என்ன

 சனாதன தர்மம் என்றால் என்ன

சனாதன தர்மம் என்றால் எப்போதும் கடை பிடிக்க வேண்டிய கடமைகள், கோட்பாடுகள்.

இது ஆரிய மதத்தை குறிக்கும் சொல். இந்து மதம் என்பது பலரும் கொள்ளும் கருத்துக்களை உடையது.

திருக்குறளில் இப்படி ஒரு கோட்பாடு எதுவும் இல்லை. அறம் என்ற கோட்பாடு ஒன்றுதான் குறளில் வலியுறுத்தப்படுகிறது.

பலர் அறம் என்ற சொல்லையும், தர்மம் என்ற வட சொல்லையும் இணைக்கலாம். இது சரியான தில்லை. நாம் அப்படி பழகிப்போய் விட்டோம். வட மொழியில் தர்மம் என்றால் கடமை என்று பொருள். சத்திரிய தர்மம் என்றால் சத்திரியர் கடமை என்று பொருள்.

சனாதன தர்மம் என்றால் அவரவர் குலம் என்ன கடமையை செய்ய வேண்டும் என்று விதித்தார்களோ அதை எப்போதும் தவறாமல் செய்ய வேண்டும் என்று பொருள்.

அற வழி என்றால் நல்ல வழி என்று பொருள். அற வழிக்கும் சனாதன வழிக்கும் நேரடி சம்பந்தம் இல்லை.

இன்னும் விளக்கமாக சொல்கிறேன்.

சனாதன தர்மம் வகுக்கப்படுகிற ஒரு நூல் பகவத் கீதை. இந்த நூலை மிக சிறந்த நூல் என்பார்கள். உங்களில் இதைப் படித்துப் பார்த்தவர்கள் ஒரிருவர்தான் இருப்பீர்கள்.

பகவத் கீதையில் கிருஷ்ணன் என்கிறவன் தானே கடவுள் என்கிறான். மக்களை நான்கு வகையாய் பிரித்தவன் தானே என்கிறான். ஓரொர் பிரிவுக்கும் அடிப்படையாக ஒரு குணம் என்கிறான். இந்த அடிப்படை குணம் என்பது innate அல்லது inborn அதாவது கூடவே வருவது அதவாவது பிறவியில் உண்டானது என்கிறான். பிராமணனை உன் குணப்படி கோயில் பூசாரியாக கடமையை செய் என்கிறான். சத்திரியனை பார்த்து அரசாங்கம் சண்டை கடமைகளை செய் அதற்க்கான குணம் உண்டு என்று சொல்கிறான். வைசியன் என்பவனைப்பர்த்து மாடுகள் வளர்த்து அதற்க்கான குணம் உனக்கு உண்டு என்றான். இவர்களை இரண்டுமுறை பிறந்த உயர் பிறவிகள் என்றான். நான்காவதாக உள்ள சூத்திரர்களைப் பார்த்து குணம் ஏதும் சொல்லாமல் முன் கூறிய மூவருக்கும் வேலையாளக இரு என்றான். இந்த பிரிவினையை செயத தன்னாலேயும் மாற்ற முடியாது என்றும் சொன்னான்.

கிருஷ்ணன் இது மட்டுமா சொன்னான்? அவரவர் கடமையை மட்டும்தான் செய்ய வேண்டும் என்றான். சூத்திரன் எவ்வளவு தான் வீரமுள்ளவனாய் இருந்தாலும் சத்திரியன் கடமை வேலை செய்யக்கூடாது என்றான். சத்திரியன் எவ்வளவு தான் படித்திருந்தாலும் பூஜை வேலைகளை செய்யக்கூடாது என்றான். அப்படி செய்தால் பாவங்கள் உண்டாகும் என்றான். இந்த பாவங்கள் அடுத்த பிறவியில் தொடரும் என அச்சுரித்தினான். இன்னும் சொல்கிறான் மற்ற கொள்கைகளை மதங்களை ஒதுக்குகுங்கள் என்றான். தன்னை வழிபாடு செயதால் கீழுள்ள பெண்கள், சூத்திரர்கள், வைசியர்கள் மாட்சிமை அடையலாம் என்றான். இதெல்லாம் இரகசியம் என்றான்.

இதுதான் சனாதன மதம். இது நமது மதம் அல்ல. பகவத் கீதையில் சாதி தர்மம் என்ற வார்த்தை உள்ளது. அதாவது அவரவர் சாதிக்கு ஏற்றவாறு கடமைகளை செய்ய வேண்டும் என்று பொருள்.

வேதம் மற்ற எல்லா சனாதன நூற்கலின் சாராம்சம் பகவத் கீதை என்று ஆரிய நூற்களைப்பை படித்தவர்கள் சொல்கிறார்கள்.

நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள் சநாதனம் என்றால் என்ன என்று.

No comments:

Post a Comment