வரலாற்றில் .05.05.2022.
"கண்ணியத்திற்குரிய காயிதே மெல்லத்" என்று போற்றி புகழப்படும் இந்திய முஸ்லீம் தலைவர்களுள் ஒருவரான "முகம்மது இசுமாயில் பிறந்த நாள் இன்று" 05.05.1896 அன்று நெல்லையில் பிறந்தார்.
இவர் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொள்வதற்காக படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டார், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவராகவும் சட்டசபை உறுப்பினராகவும் (1946-52) டெல்லி மேலவை உறுப்பினராகவும் (1952-58) நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் (1962,1967, 1971) பதவி வகித்துள்ளார்.
இசுமாயில் 1972ஆம் ஆண்டு மறைந்தார். இவரின் மறைவுக்குப்பின் தமிழக அரசு நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு 'காயிதே மில்லத் நாகப்பட்டினம் மாவட்டம்' என பெயர் பெயரிடப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டார்.
No comments:
Post a Comment