தெரிந்த விஷயம் தெரியாத பெயர்
Baby shower... பேபிக்கு எதுக்கு ஷவர்? இது நம் ஊரில் நடக்கும் ஒரு பாரம்பரியச் சடங்கின் பெயர்தாங்க... ‘வளைகாப்பு’ அல்லது ‘சீமந்தம்’ அதன் ஆங்கிலப் பெயர்தான் இது. பிறக்கப் போகும் குழந்தைக்கு அன்போடு பரிசுகளை வாரி வழங்கும் ஒரு சடங்காக இந்தப் பழக்கம் இருந்ததால் மேலைநாட்டில் ‘Baby
shower’ என்று பெயர்.
‘Bridal shower’ என்றும் மேலைநாட்டில் உண்டு. சுருக்கமா சொல்லணும்னா கல்யாணப் பொண்ணுக்கு புதுசா துணி, நகை, இத்யாதிகள் கொடுத்து சீர் செய்வதைத்தான் அவர்கள் இப்படி அழைத்தனர். இதுமட்டுமல்ல...
Diaper shower, Grandma's shower, Blessingway, Sprinkles, Meal
Shower என்று பல உண்டு!
புதுமணத் தம்பதிகளுக்கு விருந்து கொடுப்பது போல, புதிதாக குழந்தை பெற்ற தம்பதிகளுக்குப் பார்த்து பார்த்து பத்தியமாக சமைத்துக் கொடுக்கப்படும் விருந்துதான் Meal
Shower. இரண்டாவது குழந்தையும் ஸ்பெஷல்தானே! அதற்கு வளைகாப்பு போடாவிட்டாலும் அதை ஆசீர்வதிக்கும் விதமாகச் செய்யும் சடங்குதான் Blessingway. பெரும்பாலும் முதல் குழந்தைக்கு பரிசாக அளித்த பல பொருட்கள் இரண்டாம் குழந்தைக்கும் பயன்படுத்துவார்கள் (தொட்டில், பொம்மை போல). அதனால் இந்தச் சடங்கில் பரிசுகள் கம்மியாக இருந்தாலும், அன்பும் அரவணைப்பும் அதிகம் இருக்கும்.
முதல் குழந்தை ஆணாக இருக்கும் பட்சத்தில், இரண்டாவது குழந்தை பெண்ணாக பிறந்தால், அப்போது செய்யும் சடங்கு
Sprinkles. அதாவது, முதல் குழந்தையும் இரண்டாவதும் வேறு வேறு பாலினமாக இருப்பின் இந்தச் சடங்கு செய்யப்படும். முதல் குழந்தை புதிதாக பிறக்கபோகும் ஒரு ஜீவனை தன் தம்பி, தங்கையாக ஏற்றுக்கொள்ள மனதளவில் தயார்படுத்துதலே இந்தச் சடங்கின் நோக்கம்.
‘நாம் இருவர் நமக்கிருவர்’தான் இப்போது அதிகம் நடைமுறையில் இருக்கு. அப்படி இருக்கும் குடும்பத்தில் புதிதாக மூன்றாவது ஒரு குழந்தை வந்தால் செய்யப்படும் சடங்குதான் Diaper shower. ஏற்கனவே பிறந்த குழந்தைகளுக்கு பயன்படுத்திய சாமான்கள் நிறைய இருக்கும். அதனால் சிறிய அளவில் நடைபெறும் எளிமையான வளைகாப்பு தான் இது.
அம்மா, அப்பாவுக்கு மட்டும் பரிசு தந்தா போதாதுன்னு, பிரசவம் பாக்கிற அம்மாச்சிக்கும் தனி மரியாதை தந்து அவர்கள் வீட்டில் நடக்கும் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வந்து சின்னச் சின்ன பரிசு பொருட்கள் (தொட்டில், தேவையான குழந்தை சாமான்கள்) கொடுக்கும் ஒரு சடங்குதான்
Grandma‘s shower.
நம் நாட்டில் Baby
shower, Bridal shower போன்ற சில சடங்குகளை மட்டுமே நடைமுறையில் அதிகம் பார்க்கிறோம், இருந்தாலும் மேலைநாடுகளில் காணப்படும் Grandma‘s shower, Blessingway சடங்குகள் பற்றி தெரிந்து கொள்வதில் தப்பில்லைதானே!
No comments:
Post a Comment