Thursday, June 16, 2022

பெண் நோயாளிகளுக்கு கூறும் அறிவுரை

 பெண் நோயாளிகளுக்கு கூறும் அறிவுரை

        பெண்கள் மற்றும் அம்மாக்கள் தயவுசெய்து இதை புரிந்துகொள்ளுங்கள் இன்று சுலபமாக மனஉளைச்சளில் ஆளாகக் கூடியவர்கள் பெண்களே, அது வயது வித்யாசம் இல்லை, மன அழுத்தம் உங்களுக்கு வந்துவிட்டால் கிட்டத்தட்ட எல்லா நோய்களுக்கும் அது மிகப்பெரிய பாலமாக அமைகிறது,

 

        கணவர் புரிந்துகொள்ளவில்லை, பிள்ளைகள், நண்பர்கள், அலுவலக பணி, வீட்டில் உள்ள பணி, என அனைத்தும் உங்களை நேருக்கும்போது மிக அதிக அளவில் மனஉளைச்சல் ஆகும். ஆனால் இதெல்லாம் நீங்கள் மனதிற்குள்ளே வைத்து என் வாழ்க்கை இவ்வளவு தான் என் விதி இது தான் என புலம்பி தவிக்கும் போது, அந்த அழுத்தம், மன இறுக்கம், உடலில் நோயாக மாறுகிறது.

 

           மிக முக்கியமாக பெண்கள் அதிகம் பாதிக்கப்படும் PCOD, மற்றும் தைராய்டு நோய்களுக்கு மிக முக்கிய காரணம் இந்த மன அழுத்தம். நீங்கள் சரியான மருத்துவரை அணுகி கவுன்சிளின் அல்லது CUNSULTING எடுப்பது அவசியம். இதிலும் பணம் மட்டுமே நோக்கமாகா கொண்டு வைத்தியம் பார்ப்போறும் உண்டு ஆகவே நல்ல மருத்துவரை தேர்ந்துதெடுங்கள். நீங்கள் FB, INSTA, SHARECHAT, மற்றும் சமூகவலைத் தளங்களில் சுற்றி திரிவது அந்த நேரத்திற்கு வேண்டுமானால் மனபாரத்தை குறைக்கும். ஆனால் இது நிரந்தரம் அல்ல, உங்களுக்காக நான் பார்த்த பெண் நோயாளிகளுக்கு நான் கூறிய அறிவுரை, நீங்களும் பின்பற்ற முயற்சி செய்யுங்கள்

 

1.உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குங்கள்!

வீட்டு வேலை, அலுவலக வேலை என பெண்கள் சுழன்று கொண்டிருக்கிறார்கள். இந்த அழுத்தங்களுக்கு மத்தியில் தங்கள் உடல்நலனைக் கருத்திக்கொள்வதே இல்லை. குறிப்பாக, உடற்பயிற்சி... இல்லவே இல்லை. கட்டாயம் பெண்கள் உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க வேண்டும். வீட்டிலேயே எளிமையாகச் செய்யக்கூடிய பயிற்சிகளைக் கற்றுக்கொண்டு செய்யலாம். நடுத்தர வயதுப் பெண்களுக்கு உடல்ரீதியாக பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புண்டு. உடற்பயிற்சிகள் செய்வதால் உடல் எடைகூடுதல், இதய நோய்கள், சர்க்கரை நோய் போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.

2. காலை மாலை 20 நிமிடமாவது மூச்சி பயிற்சி செய்யுங்கள்,

3. கணவரோ, பிள்ளைகளோ, நண்பர்களோ யாரிடமாவது கொஞ்சம் மனசுவிட்டு பேசுங்கள்,

4. ஒரு நாளைக்கு 1நேரம் தனியாக அமர்ந்து சூரிய உதயமோ அல்லது மறைவோ பாருங்கள்,

5. உங்கள் உடலில் ரத்த அளவை அவ்வப்போது பரிசோதியுங்கள்,

6. ஆறு மாதத்திற்கு ஒரு முறை உடல் பரிசோதனை செய்யுங்கள்,

7. இரவில் சீக்கிரம் உறங்க பழகுங்கள்

8. கடவுள் பக்தி கொஞ்சமாவது இருக்கட்டும்

9. வாரம் ஒரு முறை நோன்பு இருங்கள்

10. எப்போதும் எதிர்மறையாக பேசியே உங்கள் வாழ்க்கையை கெடுக்காமல், நேர்மறையாக பேசி பழகுங்கள்

இது என்னிடம் வரும் பெண் நோயாளிகளுக்கு கூறும் அறிவுரை..

மற்றவருக்கும் பகிருங்கள்..

No comments:

Post a Comment