ஒரு மண்டலம் (48 நாள்)
அதென்ன 48 நாள்? (ஒரு மண்டலம்) அந்த கணக்கு தெரியுமா?
இது ஒரு அறிவியல் சார்ந்த விடயம். மதம் சார்ந்த விடயம் மட்டும் அல்ல.....
சூரியனிலிருந்து வெளிப்படும்
கதிர்வீச்சுக்கள் சூரிய ஒளியாக நம்மை தொடுவதை நாம் ஏற்றுகொள்கிறோம் அல்லவா? அது போலத்தான், நம் பூமியைச்சுற்றிலும் உள்ள கோள்கள், நட்சத்திர கூட்டங்கள் இவற்றிலிருந்து வெளிப்படும் கதிர் வீச்சுக்களும் நம் மேல் விழுகின்றன. முழுமையாக நம்மை பாதித்து நம் உடலில், மனதில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.
அறிவியல் பூர்வமாக சூரியனின் புற ஊதா கதிர்கள் நம் மீது படுவதால் ஏற்படும் பாதிப்புகளையும்
அதே நேரத்தில் சூரிய ஒளியின் மூலம் தான் அனைத்து உயிர்களும் பயன் பெற்று வாழ்கின்றன என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம் அல்லவா?
அதே போல் தான், நம்மை சுற்றிலும் உள்ள கோள்களின் மற்றும் நட்சத்திர கூட்டங்களின் கதிர் வீச்சுக்களும் நம் மீது தொடர்பு கொண்டுள்ளன என்பதை நாம் ஏற்றுகொள்ள வேண்டும்.
என்ன, அவை இருக்கும் தூரத்தின் காரணமாகவும்,
அவற்றின் உருவ வேறுபாடு காரணமாகவும் அவை வெளியிடும் கதிர் வீச்சுக்களின்
ஒளி சூரியனின் ஒளியைப்போல் நம் கண்களுக்கு தெரிவதில்லை.
இப்படி நம்மை வந்தடையும் கதிர்வீச்சு ஒளிகளுக்கு சொந்தமான நட்சத்திர கூட்டங்களையும்
மற்றும் கோள்களையும்
12 ராசி நட்சத்திர கூட்டங்களாகவும், 27 நட்சத்திர கூட்டங்களாகவும்
மற்றும் 9 கோள்களாகவும்
நம் முன்னோர்கள்
கண்டுபிடித்து அதை வகைப்படுத்தி வைத்துள்ளனர்.
நாம் அன்றாடம் பயன் படுத்தும் தினசரி காலண்டரில், அந்த நாள் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்துக்கு மற்றும் ஒரு குறிப்பிட்ட ராசிக்கு உரியது என்று கொடுக்கப்பட்டிருப்பதை நாம் பார்க்கிறோம் அல்லவா?
அது போல வார நாட்களிலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிரகத்திற்கு
உரியது என்பதை அதன் பெயர்களை கொண்டே நாம் அறியலாம்.
ஒரு வருடத்தின் எந்த நாளை எடுத்து கொண்டாலும் சரி அன்றிலிருந்து தொடங்கி சரியாக 48 நாட்களுக்குள் 9 கிரகங்கள், ராசிக்கூட்டங்கள் மற்றும் நட்சத்திரக்கூட்டங்கள் இவைகளுடைய கதிர்வீச்சு ஆதிக்கம் பெற்ற அத்தனை நாட்களும் கணக்கில் வந்துவிடும் எப்படி என்கிறீர்களா...?
இதோ இப்படி,
கிரகங்கள் 9, ராசி கூட்டங்கள் 12, நட்சத்திர கூட்டங்கள் 27 இந்த மூன்றையும் கூட்டி பாருங்கள்> 9+12+27=48
எப்படி சூரியனின் கதிர்வீச்சு ஒளி இல்லாமல் உலகில் விவசாயமும் இன்னும் பல விசயங்களும் செய்ய முடியாதோ, அதே போல் இந்த மூன்று கூட்டமைப்புளின்
மூலம் வெளிப்படும்
கதிர்வீச்சுகளின் ஒளியும் நாம் நம்பினாலும் நம்பாவிட்டாலும்
நம் மீது பரவி நம்முடைய செயல்களுக்கு
காரணமாக இருக்கின்றது
என்பது அறிவியல் சார்ந்த உண்மை.
எனவே தான், தொடர்ந்து 48 நாட்கள் (ஒரு மண்டலம்) செய்யும் எந்த ஒரு செயலும் மேலும் மேலும் தொடர்ந்து வெற்றிகரமாக
நடக்கின்றன.
48 நாட்கள்-Secrets
ஒரு மண்டல - ஆன்மீக பயிற்சிகள்!
(1) ஓரு பாழடைந்த ஆலயம் கூட கும்பாபிஷேகம் செய்து தொடர்ந்து 48 நாட்கள் மண்டலாபிஷேகம்
செய்தால் அங்கு மீண்டும் அங்கு அந்த தெய்வ சாநித்யம் உயிர் பேரும்.
(2) 48 நாட்கள் தொடர்ந்து நமது ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்திற்கு சென்று வந்தாலே நமது வாழ்க்கையில் ஒரு பிரமிப்பூட்டும் மாற்றம் வருவதை நம் ஒவ்வொருவராலும் உணரமுடியும்;
(3) 48 நாட்கள் தினமும் 108 முறை,
"ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ"
- என்று ஜபித்தாலே ஸ்ரீகாலபைரவப்
பெருமானின் அருள் கிட்டிவிடும்;
இதன் மூலமாக துலாம், விருச்சிகம், தனுசு,
மேஷம், சிம்மராசியில்
பிறந்தவர்களுக்கு சனீஸ்வர பகவானின் அருளும் சேர்ந்தே கிட்டும்.
(4) 48 நாட்கள் கங்கைக்கரை அல்லது காவிரிக்கரையில் முறையான குரு உபதேசம் வாங்கிய பின்னர் ஓடும் நதியின் நடுவே நின்று மந்திரம் ஜபித்தால் மகத்தான ஆன்மீக சக்திகளைப் பெறமுடியும்;
(5) 48 நாட்கள் தினமும் அண்ணாமலை கிரிவலம் சென்றால் நிச்சயமாக நமது நீண்டகால ஏக்கம் ஒன்றை அருணாச்சலேஸ்வரர் நிறைவேற்றுவார்;
(5) 48 நாட்கள் தினமும் நாய்க்கு உணவு அல்லது உணவுப் பொருட்களை அளித்து வந்தால், பைரவப்பெருமானின் பூரண ஆசி கிட்டும்;
(6) 48 நாட்கள் தினமும் குலதெய்வக் கோவிலுக்குச் சென்று விளக்கு ஏற்றி 15 நிமிடம் வேண்டிக் கொண்டால் குலதெய்வத்தின் ஆசி இப்பிறவி முழுவதும் நமக்குத் தொடர்ந்து கிட்டும்;
(7) 48 நாட்கள் உள்ளூர் சிவாலயத்தின்
வாசலில் அன்னதானம் செய்தால், அந்த சிவபெருமானின்
அருள் நமக்குக் கிட்டும்;
( 48 நாட்கள் தொடர்ந்து தினமும் உள்ளூர் சிவாலய நந்த வனத்தில்ஒரு மஹாவில்வம் கன்றுவீதம் 48 கன்றுகள் நட்டால் சிவகடாட்சம்
கிட்டும்.
அதன் பிறகு, அந்த 48 மஹாவில்வம் கன்றுகளையும்
ஒரு வருடம் வரை தினமும் நீரூற்றிப் பராமரித்து வந்தால் ஆன்மீகத்தில்
அடுத்த நிலையை எட்டிவிட முடியும்;
(9) 48 நாட்கள் தினமும் கோமாதாவை குளிக்க
வைத்து உணவு ஊட்டி வந்தால், கோமாதா பசுவாகத் தெரியாது; அது பசுவின் தாயான காமதேனுவாகக்
காட்சியளிக்கத் துவங்கும்;
(10) 48 நாட்கள் தொடர்ந்து குருவின் வழிகாட்டுதலின் படி வாசியோகம் பயிற்சி செய்தால், சில நிலைகளைக் கடந்துவிடலாம்;
(11) 48 நாட்கள் தினமும் ஒரு சிவாலயம் வீதம் 48 சிவபெருமான்
தரிசனம் செய்தால், சிவகணமாகும் வழிமுறை நம்மைத் தேடி வரும்;
(12) 48 நாட்கள் தினமும் 108 ருத்ராட்சங்களை
அண்ணாமலை அல்லது சிதம்பரம் அல்லது காசி அல்லது 12 ஜோதிர்லிங்கங்களில் தானம் செய்தால் சிவனது சூட்சும சக்திகளைப் பற்றி அறியும் குருவை அடைவீர்கள்.
தொடர்ச்சியாக 48 நாட்கள் ஒரு மண்டல
காலத்துக்குச் செய்யப்படும்
எந்த ஒரு செயலும் வெற்றிகரமாக நிறைவேறும் என்பது நம்பிக்கை. மேலே கூறப்பட்டுள்ள ஆன்மீகத்தில் பின்பற்ற வேண்டிய சில பயிற்சிகளில்
ஏதாவது ஒரு செயலையோ அல்லது வேண்டுதலையோ
48 நாட்கள் நம்பிக்கையோடு கடைப்பிடித்துப்
பாருங்களேன்.....
இதனால் தான் சித்த மருத்துவத்தில் கூட எந்த ஒரு இயற்கை மருந்தையும் ஒரு மண்டலம் சாப்பிடச் சொல்லுவார்கள். அப்படி செய்தால் அந்த நோய் நிரந்தரமாக குணமாகும். அதே போல் எந்த மதத்தினை சேர்ந்தவராய் இருந்தாலும், தொடர்ந்து 48 நாட்கள் செய்யும் வேண்டுதல்களும்
( மற்றவர்களுக்கு தீமைகள் இல்லாத ) கை கூடுகின்றன.
நம்முடைய முன்னோர்களான
சித்தர்களும், முனிவர்களும்
வெற்றுச் சாமியார்கள்
அல்ல. அவர்கள் மிகச்சிறந்த அறிவியலாலர்கள்.
இன்னும் சந்தேகமா?
இன்னும் சொல்ல போனால் சித்த மரபின் படி நாம் உண்ணும் உணவு எலும்பாகி, மஜ்ஜையாகி கொழுப்பாகி, பின்னர்... அது விந்துவாக மாறுவதற்கு ஒரு மண்டல காலம் எடுக்கும். ஏதாவது ஒரு செயலயோ அல்லது வேண்டுதலையோ 48 நாட்கள் நம்பிக்கையோடு ஒரு முறை செய்து தான் பாருங்களேன்....!
இந்த யோக அறிவியல் ரகசியத்தின் உண்மை விளங்கும்.....
No comments:
Post a Comment