Saturday, February 18, 2023

ஒரு தலைமுறை என்பது எத்தனை வருடங்களை கொண்டது ?


 



ஒரு தலைமுறை என்பது எத்தனை வருடங்களை கொண்டது ?

ஒருவர் பிறந்து வளர்ந்து மற்றுமொரு சந்ததியை உருவாக்கும்வரை உள்ள காலப் பகுதியினைத் ஒரு தலைமுறை என்று குறிப்பிடுவது வழக்கம். இதன் கால எல்லை பெரும்பாலும் இருபத்தைந்து அல்லது முப்பது ஆண்டு என்று ஒரு சாரார் கருதுகிறார்கள்.

தன்னை ஒன்றாவதாக எண்ணிக்கொண்டு தகப்பன், பாட்டன் (தாத்தா), பூட்டன் ஆகிய மூவரை மேலேயும், மகன், பேரன், கொள்ளுப் பேரன் என கீழே மூவரையும் கணக்கிட்டால் அதுதான் ஏழு தலைமுறை ஆகும் என்பது ஒரு வகை ஏழு தலைமுறைக் கணக்கு.

மற்றொரு கணக்கு நமக்கு மேலுள்ள ஏழு தலைமுறையைச் சேர்ந்த முன்னோர்களின் உறவு முறையைச் சொல்கிறது.

1. நாம், முதல் தலைமுறை

2. தகப்பன் x தாய், இரண்டாம் தலைமுறை

3. பாட்டன் x பாட்டி, மூன்றாம் தலைமுறை

4. பூட்டன் x பூட்டி, நான்காம் தலைமுறை

5. ஒட்டன் x ஒட்டி, ஐந்தாம் தலைமுறை

6. சேயோன் x செயோள், ஆறாம் தலைமுறை

7. பரன் x பறை ஏழாம் தலைமுறை

நம்முடைய ஏழாவது தலைமுறையைத் தான் (பரன்+பரை =) பரம்பரை என்கிறோம். ஒரு தலைமுறை சரியாக அறுபது வருடங்கள் என்று கணக்கிடுகிறார்கள். ஏழு தலைமுறை 7 x 60 = 480 வருடங்கள் என்றும் ஒரு கணக்கு உள்ளது. ஈரேழு தலைமுறை என்றால் 2 x 7 x 60 = 960 வருடங்கள் ஆகும். தமிழ் குடும்பங்களுக்கே உரிய சிறப்பான பரம்பரை என்பதன் பொருள் இதுவாகும். குல தெய்வத்தை வணங்குவதன் மூலம் நாம் ஏழு தலைமுறை நம் முன்னோர்களை கும்பிட்ட பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

No comments:

Post a Comment