கவலையின்றி வாழ
கவலையின்றி வாழ வேண்டுமானால் பற்று இருக்கக் கூடாது !!!*
*அதே சமயம், பற்றுதல் இன்றி வாழ நீங்கள் 10 படிகளை நாம் கடந்தாக வேண்டும் !!!*
*1. "எல்லாமே இங்கிருந்துதான் எடுக்கப்பட்டவை"*
*2.* "அனைத்தையும் இங்கேயே விட்டுச்செல்ல வேண்டும் !!!"
*"காதறுந்த ஊசியும் உடன் வராது"*
*3.* எதை நான் *"இழந்தேன்"* என்கிறாயோ ... அது உன்னுடையதல்ல. உன்னுடையது அல்லாதவைகளை, நீ எப்படி இழந்திருக்க முடியம்? ஆக, *இழக்காத ஒரு பொருளுக்கு நீ அழக்கூடாது."*
*4.* எது இன்று உன்னுடையதோ அது நாளை வேறு ஒருவருடையது ஆகிறது ஆம் !!! மானிடா !!!
*"இழப்பதற்காகவே நீ பொருட்களை பெறுகின்றாய்.*
*5.* உனக்கென்று எதுவும் நிரந்தரமாக சொந்தமில்லை !!!
*"எல்லாமே சில காலம்தான்"*
*6.* இந்த பிரபஞ்சத்தில் நீ மிகச்சிறிய தொரு துளியே ஆவாய்.
*7.* முடிவும் தொடக்கமும் இல்லாத, என்றுமே இருந்து கொண்டே இருக்கக்கூடிய காலத்தில், நீ வாழ்ந்த கால இடைவெளியானது, மிகச்சிறிய தொரு துளியே ஆகும்.
*8. நீயும், நானும், என எல்லோருமே எதிர்காலத்து உலக மக்களால் மிக விரைவில் மறக்கப்பட வேண்டியவர்களே" !!!*
*9. அனைத்து உறவுகளும் பொருட்களும் உன்னுடலும் மனமும் இவையெதுவுமே நீயல்ல". இவையாவும், உன்னிலிருந்து வேறானவை !!!*
*10. என்றுமே அழியாதிருக்கும் உயிராகிய ஆத்மாவே நீயாவாய் என்று மனமே நீ புரிந்து கொண்டு விடு !!!*
இந்த பத்து படிகள் தான் நம்மனதுக்கு தேவை. இவற்றை நம்மனதில் மீண்டும் மீண்டும் நினைவு கூர்ந்துணரும்போது, ... இந்த உடமைகளின் மீதுள்ள ... *"என்னுடையது"* என்கிற உணர்வு மறையத் தொடங்குகின்றது !!!
*உடனே பற்றுதலும், கவலைகளும் தானாக மறையத் தொடங்குகின்றன !!!*
No comments:
Post a Comment