Thursday, February 2, 2023

வருமானவரி குழப்பம்

 வருமானவரி  குழப்பம்

 

7 லட்சம் வரை வருமானவரி இல்லை ஆனா 3 லட்சத்திலேருந்து 5% வருமானவரி - இது என்ன குழப்பம் என்போருக்கு

 வருமானவரியில் Deductions, Rebate என்று இரு வகையுண்டு. Deductions என்பது வருமானவரி கணக்கீடு செய்யும் முன் வருமானத்திலிருந்து குறைக்கப்படுவது. பத்து லட்சம் வருமானம் என்றும் 3 லட்சம் Deduction என்றும் வைத்துக்கொண்டால் Gross Taxable Income is 7 lakhs. Rebate என்பது கணக்கிடப்பட்டு கட்ட வேண்டிய வருமான வரியில் அளிக்கப்படும் சலுகை. கட்டவேண்டிய வருமானவரி 2.5 லட்சம், சலுகையும் 2.5 லட்சம் என்றால் வரியே கட்ட வேண்டாமென அர்த்தம்

 

இப்போ 7 லட்சரூபாய் கணக்குக்கு வரலாம்

முதல் 3 லட்சத்துக்கு - 0 (this is Deduction)

30001 முதல் 600000 - 5% = 15000 ரூபாய் 

600001முதல் 700000 - 10% = 10,000 ரூபாய்

ஆக மொத்தம் சரியா 7 லட்சம் வருமானம் உள்ளவர் கட்ட வேண்டிய வருமான வரி 25,000 ரூபாய் ஆனா பிரிவு 87 A சலுகை 25,000 ரூபாய் (this is Rebate). ஆக மொத்தம் அவர் வருமான வரி ஏதும் செலுத்தத் தேவையில்லை 

 

87 A சலுகை தற்போது 5 லட்சத்துடன் முடிகிறது. இன்றைய பட்ஜெட்டில் இது  7 லட்சமாக அதிகரிக்கப்பட்டிருக்கு . ஒருவர் 7லட்சத்து ஒரு ரூபாய் சம்பாதித்தாலும் அவருக்கு இச்சலுகை கிடைக்காது. அவர் 25000.10 ரூபாய் வருமானவரி செலுத்த வேண்டும்.. நன்றி

No comments:

Post a Comment