Thursday, February 2, 2023

ஸ்டூடியோ செல்லாமல் செலவு இல்லாமல் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்கலாம்.! போன் இருந்தா போதும்.!

 

ஸ்டூடியோ செல்லாமல் செலவு இல்லாமல் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்கலாம்.! போன் இருந்தா போதும்.!

எந்த நேரத்தில் வேண்டுமானாலும் உங்களுடைய பாஸ்போர்ட் சைஸ் போட்டோ (Passport size photo) தேவைப்படலாம். உங்கள் வாலெட் (wallet) அல்லது பர்சில் சில பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களை சிலர் கைவசமாக வைத்திருப்பீர்கள். ஆனால், ஏதாவது ஒரு நேரத்தில் கட்டாயமாக உங்களிடம் இருக்கும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவின் இருப்பு தீர்ந்துவிடும். முக்கியமான நேரத்தில், உங்கள் கையில் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இருப்பு இல்லை என்றால், உடனே அருகில் இருக்கும் போட்டோ ஸ்டுடியோவிற்கு (Photo Studio) விரைவீர்கள். 5 நிமிடத்தில் 50 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ அல்லது 5 நிமிடத்தில் 100 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ என்று பல விளம்பரங்களைத் தேடி ஸ்டூடியோ - ஸ்டூடியோவாக ஏறி இறங்குவீர்கள்.

ஆனால், நாங்கள் சொல்ல போகும் ஸ்மார்ட்போன் ஆன்லைன் ட்ரிக் (Smartphone Online Tricks) உங்களுக்குத் தெரிந்தால், நீங்கள் வெளியில் செல்ல வேண்டிய அவசியமே இல்லை. வீட்டில் இருந்தபடி உங்களுக்கான பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை சில நொடியில் உருவாக்கிவிடலாம். இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால், உங்களிடம் இருக்கும் எந்தவொரு அழகான போட்டோவாக இருந்தாலும் சரி, அதை நீங்கள் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவாக மாற்றலாம். இதை செய்ய போன் (Phone) அல்லது லேப்டாப் (Laptop) இருந்தால் போதும். அதேபோல், உங்கள் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவில் இருக்க வேண்டிய பேக்கிரவுண்ட் (Passport size photo background) நிறம் என்ன நிறத்தில் இருக்க வேண்டும் என்பதையும் நீங்கள் மாற்றிக்கொள்ள முடியும். இதையெல்லாம் விட, மிகவும் முக்கியமான அம்சமாக உங்கள் போட்டோவில் நீங்கள் கோட் சூட் (coat suit) போட விரும்பினால், இந்த அம்சத்தின் மூலம் நீங்கள் அணிந்திருக்கும் உடைகளை கூட மாற்றிக்கொள்ளலாம் என்பது சிறப்பு.

இன்னும் இதில் ஏராளமான விஷயங்களை நீங்கள் செய்யலாம் என்பதும் கவனிக்கத்தக்கது. சரி, வாருங்கள் நாம் பேசிக்கொண்டிருக்கும் அம்சத்தை எப்படி பயன்படுத்துவது? எந்த சைசில், என்ன நிற பேக்கிரவுண்டில், எந்த நாட்டு பாஸ்போர்ட் (all country passport photo size) மற்றும் விசாவிற்காக என்ன சைசில் பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களை எடுக்க வேண்டும் என்பது போன்ற தகவலை தெரிந்துகொள்ளலாம். வீட்டை விட்டு வெளியில் செல்லமால், இலவசமாக (Free passport size photo maker) உக்கார்த்திக்கும் இடத்தில் இருந்தபடி பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுப்பது எப்படி என்பதை பற்றித் தான் இங்குப் பார்க்கப்போகிறோம். இந்த ஸ்மார்ட் ஆன விஷயத்தை மேற்கொள்ள நீங்கள் முதலில் cutout.pro என்ற இணையதள பக்கத்திற்கு நீங்கள் செல்ல வேண்டும். இது ஒரு AI ஆட்டோமேட்டிக் விஷுவல் டிசைனிங் பிளாட்பாரம் (AI Automatic Visual Design Platform) தளமாகும்.

இந்த cutout.pro தளத்தின் வெப்சைட் உங்களுக்கு திறந்த பின், பல விருப்பங்கள் காண்பிக்கப்படும். ஹோம் பேஜில் ஸ்க்ரோல் செய்து Explore More AI என்ற விருப்பத்தின் கீழ் உள்ள 2வது வரிசையில் 3வது விருப்பமாக அமைந்திருக்கும் Passport Photo Maker என்ற விருப்பத்தை கிளிக் செய்யுங்கள். இப்போது Upload Image என்ற விருப்பத்தை கிளிக் செய்து, நீங்கள் விரும்பும் புகைப்படத்தை கிளிக் செய்யுங்கள். சிறிய இடைவெளியில், நீங்கள் கிளிக் செய்த புகைப்படம் வெற்றிகரமாக அப்லோட் செய்யப்படும். இப்போது உங்களால் நீங்கள் தேர்வு செய்த போட்டோவை பாஸ்போர்ட் சைஸ் போட்டோவாக மாற்ற முடியும். உங்கள் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ என்ன அளவில் இருக்க வேண்டும் என்பதை நீங்கள் உள்ளிடலாம். அல்லது, Ai உங்களுக்காக ஏற்கனவே ரெடியாக வைத்துள்ள பல நாடுகளின் பாஸ்போர்ட் அளவில் உங்கள் போட்டோவை சிங்கிள் கிளிக்கில் மாற்றிக்கொள்ளலாம்.

உதாரணமாக, இதில் India(Passport 3.5x3.5 cm), India(Passport 5x5 cm), India(Passport 3.5x4.5 cm), India(Visa), India(Overseas Citizenship (OCI)), India(PAN Card), Canada(Visa), Malaysia(Passport), United States of America(USA), என்று பல நாடுகளில் கோரப்படும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களின் அளவுகள் தேர்வுக்காக கிடைக்கின்றன. உண்மையிலே இது மிகவும் பயனுள்ள அம்சமாக செயல்படுகிறது. இப்போது போட்டோவின் சைஸை தேர்வு செய்துவிட்டிர்கள், ஆனால் பேக்கிரவுண்ட் கலரை மாற்ற வேண்டிய அவசியம் உங்களுக்கு இருக்கிறது என்றால், இடது மேல் மூலையில் கொடுக்கப்பட்டுள்ள 3 ஐகான்களின் இருந்து 2வது ஐகானாக இருக்கும் கலர் பில்லர் ஐகானை கிளிக் செய்ய வேண்டும். இப்போது உங்களுக்குக் காண்பிக்கப்படும் கலர் பாலேட்டில் (Colour Palette) இருந்து தேவைப்படும் நிறங்களை சிங்கிள் கிளிக்கில் நீங்கள் தேர்வு செய்துகொள்ளலாம்.

இறுதியாக டி-ஷர்ட் போல இருக்கும் ஐகானை கிளிக் செய்தால், உங்களுக்கு பல ஆடைகள் காண்பிக்கப்படும் - இதில் இருந்து எந்த ஆடையை வேண்டுமானாலும் நீங்கள் கிளிக் செய்யலாம். சிங்கிள் கிளிக்கில் நீங்கள் போட்டோவில் அணிந்திருக்கும் ஆடை, நீங்கள் செலக்ட் செய்த ஆடையாக மாற்றப்படும். இந்த அம்சத்தில் பெண்கள், குழந்தைகள் மற்றும் ஆண்கள் என்று 3 பிரிவுகள் உள்ளது. ஆடையை மாற்றம் செய்ய மட்டும் நீங்கள் லாகின் செய்ய வேண்டிய அவசியமுள்ளது. இறுதியாக நீங்கள் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களை எல்லாம் மேற்கொண்ட பிறகு, பக்கத்தில் இருக்கும் Download விருப்பத்தை கிளிக் செய்து உங்கள் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை நீங்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். டவுன்லோடு செய்வதற்கு உங்கள் பேஸ்புக் அல்லது மெயில் ID விபரம் கேட்கப்படும். இப்படி ஒரு அம்சம் உங்கள் கையில் இருந்தால் வேண்டிய நேரத்தில், உடனடியாக டிஜிட்டல் காப்பி பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களை (Digital copy passport size photo download) நீங்கள் உருவாக்கலாம்.

No comments:

Post a Comment