இறுதிச்சடங்கில் ஏன் பங்கேற்க வேண்டும்
*மனிதன், ஏன் இன்னொரு மனிதனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க வேண்டும்.?*
*"மரணம்" உன்னதமானது.! அதை உணரும் போது... உயிர் உடலில் இருக்காது.!*
*ஒரு மனிதன், எப்போது அச்சம் கொள்கிறான்.?*
*இன்னொரு மனிதனின் இறந்த சவத்தை பார்க்கும் போது தானும் நடுங்குகிறான்.*
*உலகின் வேறு எதுவும் , மனிதனை இத்தனை அசைத்துப் பார்ப்பதில்லை.!*
*நமக்கு சோறு ஊட்டிய அன்னை, நம்மைத் தோளில் சுமந்த தந்தை, நாம் தூக்கி வளர்த்த பிள்ளை, நமது இன்ப துன்பங்களைப் பகிர்ந்த வாழ்க்கைத் துணை, நம்முடன் சுற்றித் திரிந்த நண்பர்கள், இவர்களின் மரணம் நம்மை புரட்டி எடுக்கும்.!*
*ஒருநாள் நமக்கும் மரணம் இருக்கிறது என்ற எண்ணமே.... நம்மை ஆட்டிப் பார்க்கிறது.!*
*மனதுக்கு நெருங்கியவரை குழிக்குள் இறக்கி மண்ணிட்டு மூடும் போது .. வரும் வெறுமை...!*
*நமது தலையில் சேர்த்து வைத்திருக்கும் புகழ், ஈகோ, அகந்தை, கர்வத்தையும் சேர்த்து, அனைத்தையும் மண்ணோடு மூடிவிடும்.!*
*ஒரு மரணத்தைக் காணும் போது ... மனம் இறங்க வேண்டும்.!*
*"மரணம் எனக்கும் வரும்" என்ற எண்ணம் தான்.. ஒவ்வொருவருக்கும் கட்டாயம் இருக்க வேண்டும்.!"*
*பணம் மீது தீராத வெறி, பதவி மீது தீராத வேட்கை, இவையெல்லாம் மரணம் எனக்கு வராது என்ற எண்ணத்தின் நீட்சியாக இருக்கலாம்.!*
*ஒவ்வொரு மரணத்தைக் காணும் போதும்.. நம் மனதில் இருக்கும் வஞ்சம், பகை, ஈகோ, போன்றவற்றை மறக்க அல்லது குறைக்கவாவது வேண்டும்.!*
*ஒரு பிரேதம் மண்ணில் அடக்கம் செய்யும் போது .... வஞ்சம், பகை, ஈகோவையும் அத்தோடு மண்ணுக்குள் போட்டு அடக்க வேண்டும்.!*
*மரணத்தின் எண்ணம், நம் இறை அச்சத்தை அதிகரிக்கும்.!*
*மரண வீடுகளுக்கு கட்டாயம் செல்ல வேண்டும். காரணம், மரண வீடுகளுக்குச் சென்று மரணித்தவரைக் காணும்போது... நம் மனமும் அதற்கான ஒத்திகையை செய்து கொள்கிறது.!*
*மண்ணின் இயற்கை சுழற்சியை ஒழுங்கு செய்யும் ஒரே விஷயம் மரணம் மட்டுமே.!*
*மரணத்தை நேசிப்போம்! காரணம்., நமக்கு இவ்வுலகில் நிச்சயிக்கப்பட்ட பரிசாக மரணம்தான் காத்திருக்கிறது.!*
*மண்கலம் கவிழ்ந்த போது... வைத்து வைத்து அடுக்குவார் வெண்கலம் கவிழ்ந்த போது... வேணும் வேணும் என்று பேணுவார்! நன்கலம் கவிழ்ந்த போது... நாறும் என்று மண்ணுக்குள் போடுவார்.!*
*மண்பானை கவிழ்ந்து உடைந்து போனால் .... அது தேவைப்படும் என எடுத்து அடுக்கி வைப்பார்கள்..!*
*வெண்கலப் பானை வீழ்ந்து நசுங்கிப் போனால் ....அது வேணும் என்று பாதுகாப்பார்கள்.!*
*ஆனால் .....,*
*நமது உடம்பை விட்டு உயிர் போய் கிடக்கும் போது .... அதனைப் பிணம் என்று இகழ்ந்து... அது கிடந்தால் நாறும் எனக் கூறி, குழிவெட்டி அதனில் போட்டு மூடிவிடுவார்கள்..!*
*இப்படி ஒரு காசுக்கும் கூட உதவாத எண் சாண் உடம்பில் ,உயிர் இருக்கும் போதே.., நம்மால் இயன்ற நல்லதை மற்றவர்களுக்கு செய்வோம்...! நாமும் வாழ்ந்து.. பிறரையும் வாழவைத்து... மனநிறைவு கொள்வோம்..!*
No comments:
Post a Comment