Sunday, February 5, 2023

விடுதலைப் பத்திரம் பற்றிப் புரிந்து கொள்ள வேண்டிய 15 செய்திகள்

 விடுதலைப் பத்திரம் பற்றிப் புரிந்து கொள்ள வேண்டிய 15 செய்திகள்

ஒரு நபருக்கு பாத்தியப்பட வேண்டிய சொத்தை தனக்கு வேண்டாம் என அதற்கு பாத்தியப்பட போகும் இன்னொரு உரிமையுள்ள நபருக்கு விட்டுக் கொடுப்பதே விடுதலைப் பத்திரம் ஆகும்.

குறைந்த அளவு நிலம் , 10க்கும் மேற்பட்ட வாரிசுகள் அல்லது சொத்தை நீள அகலத்துடன் பிரித்துக் கொள்ள முடியாது. அப்படிப் பிரித்தாலும் யாருக்கும் பயன் இல்லை என்பது போன்ற நிலையில் தான் மேற்படி சொத்தை பாத்தியப்பட்ட ஒருவருக்கு விட்டுக் கொடுப்பதற்கு விடுதலைப் பத்திரம் எழுதுகின்றனர்.

வெளிநாட்டிலோ, வெளியூரிலோ, வெளிமாநிலத்திலோ முழுவதுமாக செட்டில் ஆகிவிட்டார்கள் தங்கள் பங்கு சொத்தை அனுபவிக்க முடியாது என்று கருதி அங்கு அனுபவிக்கும் சகோதர சகோதரிக்கு விடுதலைப் பத்திரம் எழுதிக் கொடுக்கின்றனர்.

என் அனுபவத்தில் பெண்கள்தான் தன் சகோதரர்களுக்கு அதிக அளவு விடுதலைப் பத்திரம் எழுதிக் கொடுக்கின்றனர். பெண்களைச் சொத்துரிமையில் இருந்து வெளியேற்றவே இந்தப் பத்திரங்கள் நடக்கிறது.

சொத்தை விட்டுக் கொடுப்பவர்கள் பெரும்பாலும், சொத்து வாங்குபவரிடம் பிரதி பலன் பெற்று கொள்கிறார்கள்.

விடுதலைப் பத்திரம், குடும்பத்திற்குள் செய்யும் விடுதலைப் பத்திரம், குடும்பம் அல்லாதார் செய்யும் விடுதலைப் பத்திரம் என இரண்டு வகை ஆகும்.

இரத்த உறவு இல்லாத இரு நபர் பொதுச்சுவர், பொதுவாய்க்கால், பொதுபாதை, பொதுகிணறு, பொதுச்சொத்து என எல்லாவற்றிற்கும் அனுபவிக்கும் உரிமையை விட்டுவிட எண்ணி மற்றொருவருக்கு விட்டுவிடுவது குடும்பமல்லாதவர் விடுதலைப்பத்திரம் ஆகும்.

குத்தகைதார் , தன்னுடைய குத்தகைஉரிமையை குத்தகை விட்டவரிடம் ஏதாவது ஒரு தொகை வாங்கிக் கொண்டு விட்டுக் கொடுத்தாலும் அதற்குக் குடும்பமல்லாதவர் விடுதலைப் பத்திரம் ஆகும்.

விடுதலைப் பத்திரம் (குடும்பத்திற்குள்) என்றால் சொத்தின் வழிகாட்டி மதிப்புக்கு 1% முத்திரைத்தாள் வாங்க வேண்டும். அதிகபட்ச சலுகையாக ரூ. 25,000 மட்டும் முத்திரைத்தாள் வாங்க வேண்டும். அதாவது 10 கோடி வழிகாட்டி மதிப்பு வந்த சொத்தானால் 1% என்றால் 10 இலட்சம் முத்திரைத்தாள் வாங்க வேண்டியது இல்லை, அதிகபட்ச தொகையான 25,000 க்கு முத்திரைத்தாள் வாங்கினால் போதும்.

பதிவு கட்டணம் சொத்தின் மதிப்பில் 1% அதிகபட்சம் 4% விடுதலைப் பத்திரத்தை ரத்து செய்யவோ மாற்றி எழுதவோ முடியாது எழுதினால் எழுதியது தான்.

பிறத்தியாருக்கான விடுதலைப் பத்திரம் என்றால் கிரயத்திற்கு ஆகும் முத்திரைத் தாளைவிட அதிகம் கொடுக்க வேண்டி இருப்பதால் பிரத்தியார் விடுதலைப் பத்திரம் போடுவதற்குப் பதில் கிரயப்பத்திரம் எழுதிக் கொடுத்துவிட்டு வெளியேறுகின்றனர்.

விடுதலைப்பத்திரம் பிறத்தியாருக்கு சொத்தின் மதிப்பின் படி முத்திரைத்தாள் 8% பதிவு கட்டணம் குத்தகையில் இருந்து வெளியேற்றும்போது கைமாறும்

சொத்தின்படி 1% மதிப்புக்கு முத்திரை தீர்வை கட்டி பிரத்தியார் விடுதலைப் பத்திரம் எழுதலாம்.

விடுதலைப் பத்திரத்தை கூட்டாகவோ, அல்லது தனித்தனியாகவோ எழுதலாம்.

விடுதலைப் பத்திரத்திற்கும் பூரண சம்மதம், எழுதிக் கொடுப்பவர் கொடுக்க வேண்டும்.

விடுதலைப் பத்திரத்தை எழுதிக் கொடுப்பவர் Releasor,

எழுதி வாங்குபவர் – Release – விடுதலைப் பத்திரம் – Release Read.

No comments:

Post a Comment