Thursday, February 2, 2023

குப்பைமேனி மருத்துவமும் இராஜவசியமும்

 



குப்பைமேனி மருத்துவமும் இராஜவசியமும்

இந்த மூலிகைக்கு வேறு பெயர்கள் அரிமஞ்சிரி,

அண்டகம்,

பூனை வணங்கி,

அனந்தம்,

கொழிப் பூண்டு,

சங்கரபுஷ்பி, போன்ற வேறு பெயர்களும் இதற்கு உண்டு.

இது தோட்டங்கனிலும், சாலையோரங்களிலும்,

காடுமேட்டில் எங்கும் காணப்படுகிற ஒரு சிறு தாவரம்.

இதை யாரும் வளர்ப்பதில்லை, காடுமேட்டில்தானே தானே வளரும் தன்மை உடையது.

இதன் இலை பச்சைபசேலென முக்கோண வடிவமாக ஓரங்கள் அரும்பு;

அரும்பாக இருக்கும்.

நன்கு முற்றிய இலையில் ஒரு சில இடங்களில் மஞ்சள் நிறப் புள்ளிகள் இருக்கும்.

பூக்கள் வெண்மையாக,

சிறியதாக இருக்கும்.

காய்கள் முக்கோண வடிவில் மிளகளவில் பச்சையாகக் காணப்படும்.

காய்களைச் சுற்றிப் பச்சை நிறத்தில் செதில்கள் இருக்கும்.

மாற்றடுக்கில் அமைந்த பல அளவுகளில் உள்ள இலைகளையும் இலைக்காம்பு இடுக்கிலமைந்த பூக்களைக் கொண்ட குறுஞ்செடி. இது சுமார் 50 செ.மீ. உயரம் வரை வளரக்கூடியது.

இந்த குப்பை மேனியை

நம் முன்னோர்கள்,

மார் ஜாலமோகினி என்பர்கள்

இதன் மருத்துவ குணங்களை முதலில் தெரிந்துகொண்டு பிறகு மாந்திரீக குணத்தை தெரிந்துகொள்ளலாம்,

இந்த மூலிகை செடி கடையல் செய்து சாப்பிட்டால் நெஞ்சுக்கோழை எனும் நெஞ்சில் கட்டிய சலி'யை நீக்கும்,

இருமலைக்கட்டுப் படுத்தும்,

மேலும் இது விஷக்கடி,

ரத்தமூலம்,

வாதநோய்,

நமச்சல்,

ஆஸ்துமா,

குடற்புழுக்கள்,

மூட்டுவலி மற்றும் தலைவலி போன்ற நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகிறது.

இதன் இலை வாந்தி உண்டாக்கிக் கோழையகற்றியாகவும்.

இதன் வேர் மலமிளக்கியாகவும் பயன்படுகிறது.

இந்த இலைச் சூரணத்தைப் பொடி போல் மூக்கில் பொடி போல இட தலை வலி நீங்கும்.

இந்த இலை,

சிறிது மஞ்சள்,

உப்பு அறைத்துப் உடலில் பூசி சற்றுநேரம் கழித்துக்குளிக்கத் தோல் சம்மந்தமான மேல் சொன்ன அனைத்து நோய்களும் தீரும்,

இதை வெறும் வயிற்றில் 2அல்லது 3இலைகளை வெறும் வயற்றில் நன்றாக மென்று சாப்பிட வயிற்றில் இருக்கும் குடற் பூச்சிகளை போக்கும்.

அதோடு மட்டுமல்லாமல்

இதன் வேரை

நிழலில் உலர்த்தி

50கிராம் அளவு எடுத்து இடித்து பொடி செய்து 200 மி.லி. நீரில் காய்ச்சி குடிநீராக அருந்தினால் குடலில் இருக்கும் நுண் பூச்சிகள்அனைத்தும் வெளியேறும்.

மேலும்,

இதன் இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளம் சூட்டில் கட்டிவர படுக்கைப் புண்கள் (பெட் புண்)ஆறும்.

இதன் இலையை கைப்பிடியளவு எடுத்து

சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்துப் உடலில் பூசி சிறிது நேரம் கழித்துக் குளிக்க,

பல்வேறு சம்மந்தமான தோல் நோய் குணமாகும்,

இந்த குப்பைமேனி இலையை அரைத்து சாறு எடுத்து 2 தேக்கரண்டியளவு 12 வயது வரை உள்ள சிறியவர்களுக்குக் கொடுக்க வயிற்றைக் கழியச் செய்து கோழையை அகற்றும்.

இதன் இலையை எடுத்துச் சாறு பிழிந்து 200 மில்லியளவு எடுத்து அதேயளவு நல்லெண்ணெயுடன் கலந்து தைலப் பதமாகக் காய்ச்சி இறக்கி வடிகட்டி மூட்டு வலியுள்ள இடத்தில் தேய்த்து வர குணமாகும்.

இதன் சாறு எடுத்து அத்துடன்

சிறிது வேப்பெண்ணெய்

கலந்து சிறு குழந்தைகளுக்குத் தொண்டையில் அல்லது உள்நாக்கில் தடவ வயிற்றில் தங்கியிருக்கும் கோழைக்கட்டு,

பால்கட்டு வாந்தியினால் வெளியேறும்.

இலையை அரைத்து

சர்க்கரை நோய்யாளிகளுக்கு ஏற்பாடும்

புண்களுக்கு வைத்துக் கட்டிவர புரையோடிய புண்களும் குணமாகும்,

இந்த கீரையாக ஆமணக்கு எண்ணெயில் தாளித்து ஒரு மண்டலம் (48 நாள்கள்) தொடர்ந்து உண்டுவர வாய்வுடன் சேர்ந்த பொல்லாத சிலோத்தும

பிணிகள் (அதாவது வாயு கோளாரால் ஏற்படும் சளி இருமல் போன்ற)

எல்லாவற்றையும் போக்கி,

உடல் நலம் பெறும்.

சரி இனி இந்த மூலிகை

மாந்திரீக ரீதியாக எவ்வாறு பயன்படுமென்பதை தெரிந்துகொள்வோம் வாங்க....

மாந்திரிக வித்வான்'னாகிய அகத்தியர்

தன் சீடன் புலஸ்தியன் என்பவருக்கு கொடுத்த உபதேச நூல்;

"அகத்தியர் மாந்திரீக காண்டம்"

என்ற நூலிலிருந்து

அடியேன் கண்ட அனுபவம் இது

நண்பர்களாகிய நீங்களும் பயன் பெற

வெளிப்படையாக எழுதுக்கிறேன்

பாக்கியம் உள்ளவர்களுக்கு மட்டும் என் பதிவு சேரட்டும்.....

இதோ,

அகத்தியர் பாடலை கவனியுங்கள்.

"ஆகுவா யம்பலவா புலஸ்தியா கேள்

அப்பனே பூனைத்தா ள்வணங்கு மேனி

வாகுடனே சாபமதை நீக்குதற்கு

வளம் பெரிய பிராணவங்க ளேதென்றாக்கால்

சாகுடைய வட்சரமாம் தூ தூ வாகும்

சதுர மன்னர் தான் மயங்குந் தழை தானாகும்

நாகுடனே லட்சமுருவோ துவோது

நாயக னேநாடெல்லாம் வசியந் தானே"

அதாவது

நம்18

சித்தப்பெருமானார்களில்

ஒருவரான அகத்தியர் தன் சீடன் புலஸ்தியன் என்பவருக்கு இந்த மூலிகையை பற்றி மாந்திரீக காவியம் என்ற நூலின் மூலம் மேல் சொன்ன பாடலின் மூலம் உபதேசம் செய்துள்ளார்

இந்த பாடலின் விளக்கம்

பின் வருமாறு கவனியுங்கள்.

'புலஸ்தியன் என்ற சீடனே கேள்

பூனை வணங்கி என்ற குப்பைமேனி செடியை தேடி

அதற்கு முறைப்படி காப்பு கட்டி

சாப நிவர்த்தி செய்ய

"தூ தூ" என்ற மந்திரத்தை லட்சம் முறை கூறி

(மறைக்கப்பட்ட உண்மை,

எலுமிச்சை அல்லது தடியன் காய் பலி கொடுத்து)

ஆணி வேர் அறாமல் பிடுங்கி கொண்டு வந்து

காரம் பசும் பாலில் கழுவி

எடுத்து வாசனை திரவியங்களான

அத்தார், புனுக்கு, ஜவ்வாது பூசி ஒரு தாயத்தில் அடைத்து கழுதில் கட்ட இராஜ வசியம் உண்டாகும்,

அல்லது இதன் இலைகளை எடுத்து புது மண் சட்டியில் போட்டு கருக்கி "மை"யாக்கி நெற்றியில் திலகாமிட்டாலும்

இராஜ வசியம் உண்டாகும் என்கிறார்.

இராஜ வசியம் என்பது

இன்றைய நமக்கு தெரிந்து நெருங்கி பழகும் அரசியல் வாதிகள்,

அரசு அதிகாரிகள்,போன்றவர்கள் என்பதை கருத்தினில் கொள்க.


No comments:

Post a Comment