பாஸ்தா சாப்பிடலாமா?
·
நமக்கு பிடித்தமான உணவு என்று வரும்போது, அதில் பாஸ்தா போன்ற திருப்திகரமான உணவும் இடம்பெறும். ஸ்பாகெட்டி, டார்டெல்லினி, அல்லது லாசக்னா ஆகிய வேகவைத்த பாஸ்தா வகைகள் எல்லாமுமே நமக்கு பிடிக்கும்.
·
சரியான சாஸுடன் இணைந்து, காய்கறிகள் மற்றும் சீஸ் சேர்த்து தயாரித்தால் மிக அற்புதமான சுவையை இது தரும்.
·
முழு தானியங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட பாஸ்தாவாக இருந்தால், அதில் வைட்டமின்கள், மக்னீஷியம், இரும்பு, கால்சியம், மாங்கனீஷ் உள்ளிட்ட தாது உப்புக்கள், நார்ச் சத்து போன்றவை இயற்கையாகவே இருக்கும்.
·
கோதுமையில் செய்யப்பட்ட பாஸ்தாவில் அதிக அளவில் நியாசின், தயாமினும், நார்ச்சத்தும், புரதச் சத்தும் அடங்கி உள்ளது. இதைச் சாப்பிடும்போது பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் நமக்கு முழுமையாகக் கிடைக்கும்.
·
இந்த வகை பாஸ்தாக்கள், பி காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட் கொண்டது. இதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பு என்பது மிகவும் மெதுவாக இருக்கும். பாஸ்தாவுடன் அதிக அளவில் காய்கறிகள் சேர்க்கப்பட்டு சமைக்கப்படும்போது, அதன் பலன்களும் கூடும்.
·
எனவே, கடையில் பாஸ்தா வாங்கும்போது அது முழு தானியங்களால் தயாரிக்கப்பட்டதா என்பதைக் கவனித்து வாங்க வேண்டும்.
·
பாஸ்தாவை உலக அளவில் அதிக அளவிலான உணவுப் பிரியர்கள் சாப்பிட்டு வருகின்றனர்.
·
தினசரி பாஸ்தாவை சாப்பிடுபவர்கள் அதிக எடையைக் குறைக்கிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
·
மேலும், பாஸ்தாவை முழுவதுமாக சாப்பிடாமல் இருப்பதற்கு பதிலாக, போதுமான அளவு சாப்பிட்டு வந்தால் உடல் எடையை குறைக்க முடியும் . மேலும், முழுதானியத்தால் தயாரித்த பாஸ்தாவிற்கு மாறினால், அதன் பலனை இன்னும் உயர்த்தி, குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.
சாலட்டாக சாப்பிடலாம் :
·
காய்கறிகள் நிறைய சாப்பிடுவது ஆரோக்கியமான உணவு முறையாகும். எனவே, பச்சை காய்கறிகளை ஒரு பக்க உணவாக சேர்ப்பது உணவின் ஊட்டச்சத்து அளவை உயர்த்தும்.
·
இது தவிர, இது ஒருவரின் வயிற்றை நிரப்பவும் உதவும். எனவே, பாஸ்தா சாப்பிடும் போது, சாலட்டும் உங்கள் உணவில் எடுத்து கொள்ளுங்கள்.
பாஸ்தாவில் காய்கறிகளை சேர்க்கவும் :
·
சாலட்டின் சைட் டிஷ் உடன், உணவில் காய்கறிகள் உட்கொள்வதை அதிகரிக்க, பட்டாணி, பீன்ஸ், குடை மிளகாய், சோளம் போன்ற பல வகையான காய்கறிகளுடன் பாஸ்தாவைக் சாப்பிடுவது ஆரோக்கியமானது
·
மேலும், நீங்கள் சாப்பிடும் அளவில் எப்போதும் கவனமாக இருத்தல் முக்கியம். சில நேரங்களில் அதன் சுவை அருமையாக இருக்கிறது என்று அதிக அளவில் சாப்பிட்டு விடுவோம். இது எடை உயர்வதற்கு வழி வகுக்கும்.
கொழுப்பைத் தவிர்க்கவும் :
·
சீஸ் போன்றவற்றை அதிக அளவில் பாஸ்தாவில் சேர்த்து கொண்டு சாப்பிட வேண்டாம். ஒன்று பாஸ்தாவில் சீஸ் சேர்ப்பதைத் தவிர்க்கலாம் அல்லது சீஸை குறைவாக பயன்படுத்தலாம். இல்லையேல்,
·
இது உங்களின் உடல் எடை குறைக்கும் முயற்சிக்கு தடையாக இருக்கும். அதே போன்று, அதிக கொழுப்பு நிறைந்த வெண்ணெய், சமையல் எண்ணெய் போன்றவற்றையும் தேவைக்கேற்ப பயன்படுத்துங்கள்.
பாஸ்தாவின் தாயகம்
·
இட்லி, தோசைகளின் இடத்தை பாஸ்தா, பீட்சா பிடித்துவிடுமோ என அச்சமாக இருக்கிறது. இவை நூடுல்ஸ் வகையைச் சார்ந்தவைதான்.
·
பாஸ்தாவின் தாயகமான இத்தாலியில், மூன்று வகைகளில் இது பரிமாறப்பட்டாலும், உலக அளவில் நூற்றுக்கணக்கான வடிவங்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெயர்களில் உலா வருகிறது. பாஸ்தா உணவு முறைப் பற்றி டயட்டீஷியன் ஹேமமாலினியிடம் கேட்டோம்.
·
'பெரும்பாலும் மைதா மாவைப் பயன்படுத்தித்தான் பாஸ்தாவும் தயாரிக்கப்படுகிறது.
·
மைதா என்பது நன்கு சுத்திகரிக்கப்பட்டு, சத்துக்கள் அனைத்தும் நீக்கப்பட்ட உணவுப் பொருள். இதில் நார்ச் சத்து உள்பட எந்தச் சத்துமே இல்லை என்பதால், உடலுக்கு எந்த நன்மையும் கிடையாது. பாஸ்தாவில் அதிக அளவில் கார்போஹைட்ரேட் உள்ளது. இது ரத்தத்தில் சர்க்கரை அளவை வேகமாக அதிகரிக்கும் தன்மைகொண்டது.
·
இது, பெரும்பாலானவர்களுக்கு செரிமானத்தில் பிரச்னை ஏற்படுத்தும். பாஸ்தா ஒரு பதப்படுத்தப்பட்ட உணவு என்பதால், ஆரோக்கியமானது அல்ல.
பாஸ்தாவை சமைக்கும் முறை:
·
'நூடுல்ஸ் வகை உணவுகளைச் செய்வதுபோன்றே பாஸ்தாவையும் தயாரிக்கலாம்.
·
காய்கறிகள், காளான், இறைச்சி, முட்டை போன்றவற்றையும் சேர்த்து இதைச் சமைக்கலாம்.
·
காலையில் பழத்துண்டுகள், தேன் சேர்த்து சாப்பிடலாம். இரவு உணவாகவும் எடுத்துக்கொள்ளலாம்.
·
சுவைக்காக எப்போதாவது சாப்பிடலாமே தவிர, அவ்வப்போது சாப்பிடுவது உடலுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்காது என்பதுதான் உண்மை.
No comments:
Post a Comment