Followers

Thursday, December 16, 2021

ஐஸ்வர்யம்

ஐஸ்வர்யம் என்றால் பண கட்டுகளோலாக்கரில் இருக்கும் தங்கமோ அல்ல 

 

வீட்டு வாசலில் பெண்பிள்ளையின் கொலுசு ஒலி ஐஸ்வர்யம் 

வீட்டிற்கு வந்தவுடன் சிரிப்போடு எதிரில் வரும் மனைவி ஐஸ்வர்யம்

எவ்வளவு வளர்ந்தாலும் அப்பா திட்டும் திட்டு ஐஸ்வர்யம்

அம்மா கையால் உணவு ஐஸ்வர்யம்

மனைவி பார்க்கும் ஓர கண் பார்வை ஐஸ்வர்யம் 

பசுமையான மரங்கள் பயிர் நிலங்கள் ஐஸ்வர்யம்

இளஞ்சூடு சூரியன் ஐஸ்வர்யம் 

பவுர்ணமி தினத்தில் சந்திரன் ஐஸ்வர்யம்

நம்மை சுற்றி இருக்கும் பஞ்ச பூதங்கள் ஐஸ்வர்யம்

பால் வடியும் குழந்தையின் சிரிப்பு ஐஸ்வர்யம்

இயற்கை அழகு ஐஸ்வர்யம்

உதடுகளால் சிரிக்கும் உண்மையான சிரிப்பு ஐஸ்வர்யம் 

அவசரத்தில் உதவும் நண்பன் ஐஸ்வர்யம் 

புத்தியுள்ள குழந்தைகள் ஐஸ்வர்யம் 

குழந்தைகள் படிக்கும் படிப்பு ஐஸ்வர்யம் 

கடவுள் கொடுத்த உடல் ஆரோக்கியம் ஐஸ்வர்யம் 

ஒருவருக்காவது உதவி செய்யும் மனசு ஐஸ்வர்யம் 

ஐஸ்வர்யம் என்றால் கையில் என்னும் பணக்கட்டு அல்ல 

கண்ணால் பார்க்கும் உலகம் ஐஸ்வர்யம் 

மனசு அடையும் சந்தோஷம் ஐஸ்வர்யம்

No comments:

Post a Comment