Tuesday, December 28, 2021

சைபர் கிரைம் குற்றங்கள் புகார்

சைபர் கிரைம் குற்றங்கள் புகார்

         2022ம் ஆண்டு புத்தாண்டு தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளன. இத்தகைய சூழ்நிலையில் பல பெரிய e-commerce நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் தயாரிப்புகளுக்கு பெரும் சலுகைகளையும் தள்ளுபடிகளையும் அளித்து வருகின்றன. அதேநேரத்தில் hackers & Cyber Crime offenders இந்த நாட்களில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்றனர்

      புத்தாண்டின் போது கவர்ச்சியான சலுகைகள் மற்றும் phishing அமைப்புகள் என்ற போர்வையில் மக்களை ஏமாற்ற சைபர் குண்டர்கள் தங்களால் இயன்றவரை முயற்சித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக இது போன்ற பல லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவங்கள் வெளியாகியுள்ளன

      இன்றைய டிஜிட்டல் உலகில் ஒவ்வொரு அடியிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் உங்கள் சிறிய கவனக்குறைவு பெரிய இழப்பை ஏற்படுத்தும் உங்கள் தொலைபேசியில் தெரியாத இணைப்புகளை ஒருபோதும் திறக்க வேண்டாம் இது ஒரு வகையான cheating இணைப்பு களாகவும் இருக்கலாம். இது தவிர கவர்ச்சிகரமான சலுகைகள் என்ற போர்வையில் உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை கேட்கும் போலி அழைப்புகள் குறித்து ஜாக்கிரதை. உங்கள் வங்கி விவரங்கள் , ATM Card தகவல், OTP  போன்றவற்றை யாருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளவும்

      ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள் முறையில் மோசடியாளர்களால் ஏமாற்றப்பட்டால் உடனடியாக *155260* என்ற இலவச எண்ணிற்கு அழைத்து மோசடியான பணப்பரிவர்த்தனை விவரங்களைத் தெரிவித்தால் பாதிக்கப்பட்ட நபரின் பணம் எதிரிகளால் பயன்படுத்த முடியாதவாறு தடுக்கப்பட்டு அவர்களின் வங்கி கணக்கிற்கு திருப்பப்படும். மேலும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து *www.cybercrime.gov.in* என்ற இணையதளம் மூலம் புகார் அளிக்கலாம்.

நன்றி வணக்கம்.

No comments:

Post a Comment