Saturday, December 25, 2021

*”அந்தாதியில் கவியரசரின் அசத்தல்"*

 *”அந்தாதியில் கவியரசரின் அசத்தல்"*

திரைப்பாடல்களில் அந்தாதிதொடை என்பது மிக அரிதான விஷயமே. அதுவும், ஒரே படத்தில் இரண்டு பாடல்களை அந்தாதியில் அமைக்க ஓர் அசுரத் திறமை வேண்டும். அது நமது கவியரசருக்கு வாய்த்திருந்தது.

ஆடிவெள்ளிஎன்று துவங்கும் கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல்!

கே.பாலச்சந்தரின் "மூன்று முடிச்சு" படத்தில் எம்.எஸ். விஸ்வநாதன் இசையில். பி.ஜெயசந்திரன் வாணிஜெயராம் இணைந்து பாடியது..

இந்த பாடல் தமிழ் திரை இசையில் முதன் முதலாக" அந்தாதி "முறைப்படி எழுதப்பட்டது.

அந்தாதிஎன்றால் என்ன ?

பாடல் எந்த வார்த்தையில் முடிகிறதோ, அந்த வார்த்தையை கொண்டு அடுத்த பாடலை துவங்க வேண்டும்.

கவிஞரோ முதல் வரியின் கடைசி வார்த்தையை அடுத்த வரியின் முதல் வார்த்தையாக வைத்து பாடலை எழுதி இருப்பார்.

ஒரு அந்தாதி பாடல் தொகுப்பை எழுதுவது சற்று சிரமமான விஷயம்.

கவியரசரோ வரிக்கு வரி அந்தாதி முறைப்படி இந்த "ஆடிவெள்ளி" பாடலில் எழுதி அசத்தியிருப்பார்!

பாடலின் முதல் வரி...

ஆடி வெள்ளி தேடி உன்னை, நான்அடைந்த நேரம்,, கோடியின்பம் தேடி வந்தேன் காவிரியின் ஓரம்

அடுத்த வரி,

ஓரக்கண்ணில் ஊற வைத்த தேன் கவிதை சாரம் ஓசையின்றி பேசுவது ஆசை எனும் வேதம்.......

அடுத்த வரி...

வேதம் சொல்லி மேளமிட்டு மேடை கண்டு ஆடும் மெத்தை கொண்டு தத்தை ஒன்று வித்தை பல நாடும்.....

நாடும் உள்ளம் கூடும் எண்ணம்........

இவ்வாறாக பாடல் முழுவதும் தொடரும் கண்ணதாசனின் கைவண்ணம்..!

இந்த படத்தில் இடம் பெறும் மற்றொரு பாடலான...

வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்...

நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்.....”

பாடலும் அந்தாதி முறைப்படி எழுதப்பட்ட பாடலே !

"ஆடி வெள்ளி" பாடல் எடுக்கப்பட்ட ஆலமரங்கள் அடர்ந்த சூழலும், மரங்களின் விழுதுகளும் பார்ப்பதற்கு அழகாக.. பின்னணியில் "அந்தாதியில்" விரியும் கவியரசரின் பாடல் மிக அற்புதம்!

No comments:

Post a Comment