Monday, December 13, 2021

திரு உத்தரகோசமங்கை

 திரு உத்தரகோசமங்கை

அமைவிடம்: மதுரை இராமநாதபுரம் நெடுஞசாலையில், பரமக்குடி சாத்திரக்குடியைத் தாண்டி, வலதுபுறமாக தூத்துக்குடி செல்லும் சாலையில் சென்று இத்தலத்தை அடையலாம். இராமநாதபுரத்திலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில், மேற்கில் அமைந்துள்ளது.

இறைவன் திருப்பெயர்: மங்களநாதர்; காட்சிகொடுத்த நாயகர்; பிரளயகேசுவரர்.

இறைவி: திருப்பெயர் மங்களாம்பிகை; சுந்தரநாயகி.

தலமரம் : இலந்தை.

தீர்த்தம் :அக்கினி தீர்த்தம்

வழிபட்டோர்: மாணிக்கவாசகர் ,வேதவியாசர். மற்றும் பலர்.

கோவில் அமைப்பு:  ஐந்து கோபுரங்கள் உள்ளது. ஆலய முகப்பில் இரண்டு கோபுரங்கள்; வலதுபுறம் ஏழு நிலைகளுடன் காட்சி தருகிறது,

மங்களநாதர் மங்களேஸ்வரி சன்னதிகளும்; நடராசர்; சுயம்புலிங்கம்; பைரவர் ;தட்சிணாமூர்த்தி ;பால பைரவர் சன்னதிகளும் உள்ளது.

முதல் சுற்றில் ,வாயு மூலையில், தேவியருடன் முருகப்பெருமான் நின்றகோலத்திலும்; இரண்டாம் சுற்றில் வாயு மூலையில் மயிலமீது ஆறுமுகத்துடன் தேவியர் சூழ மயில் மீது அமர்ந்து காட்சி தருகிறார்.

யாழிகளில் இரண்டு, வாயில் கல்லால் ஆன பந்தைக் கொண்டுள்ளது. கையை நுழைத்து ,இந்தப் பந்தை நகர்த்த முடியும்.

தல வரலாறு :

1. உலகில், முதன் முதல் தோன்றிய சிவன்கோயில் என்று அறியப்படுகிறது.

2. இராவணன் இங்கே வந்து சிவனை வணங்கிச் சென்றிருக்கிறான்.

3. மிகச்சிறந்த சிவபக்தன், தனக்கு கணவனாக வேண்டும் என்று மண்டோதரி தவமிருந்த இடம்.

4. இராவணன் மண்டோதரி திருமணம் இத்தலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

5. திருவிளையாடல் புராணத்தில் வலைவீசிய படலம் இங்குதான் நிகழ்ந்தது.

இறைவன் வேதத்தை தேவிக்கு கூறியபோது, அதனை செவிமடுக்காது இருக்க, சிவனின் கோபத்தால், மீனவகுலத்தில் இங்குவந்து பிறந்ததாகவும்; ஏட்டைக் கடலில் விநாயகரும் முருகனும் விட்டெறியக் காரணமான நந்ததியை சுறாமீனாக வந்து தேடச்செய்தும்; திருவிளையாடல் நடத்திய இடம். மீனவப்பெண்ணாக வளர்ந்த பார்வதியை, சுறாமீனை அடக்கி, மீனவனாக வந்த இறைவன் மணம் புரிந்த இடம்.

6... கடலை ஒட்டியே கோவில் வாசல் இருந்தது கடல் உள்வாங்கியதால்

ஏர்வாடிப்பக்கம் போய்விட்டது.

7.. சிவகணங்களுக்கும், பார்வதிக்கும் பிரணவ மந்திரத்தின் பொருளை இறைவன் உபதேசித்த இடம்.


பெயர்க்காரணம்: உத்தரகோச மங்கை. உத்திரம் என்றல் உபதேசம். கோசம் என்றல் மந்திரம். மந்திரத்தை மங்கைக்கு உபதேசம் செய்ததனால் உத்திரகோசமங்கை எனப் பெயர்பெற்றது

தாழம்பூ: இறைவன் அடிமுடி காணுதலில், நான்முகன் முடிகண்டதாய், பொய்சாட்சிசொன்னதாழம்பூ வழிபாட்டுக்குரிய உரிமையை இழந்தது இறைவன் மன்னித்து அருளியதால் , இங்குமட்டும் தாழம்பூ வழிபாட்டுக்குரிய மலராக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. 

மரகத லிங்கம் உருவான வரலாறு :

இராமேஸ்வரம் போகும் வழியில் மண்டபம் என்ற பகுதி உண்டு. அங்குவாழ்ந்த மரைக்காயர் என்ற மீனவர், வறுமை வாட்டியபோது மங்களநாதரை வழிபட்டார். நம்பிக்கையுடன் கடலில் சென்று மீன்பிடித்து வாழ்க்கை நடத்திவந்தார். ஒரு சமயம், சூறாவளியால் படகு நிலைகுலைந்து வேறுபக்கம் அடித்துச்செல்லப்பட்டது. பாசி படர்ந்த பாறைமேல் மோதி நின்றபோது, பாறை சரிந்து படகில் விழுந்துவிட்டதுபுயல்மழை நின்றவுடன், திசை தெரியாமல் படகைச்செலுத்திமங்களநாதரை வணங்கிட, மண்டபம் வந்து சேர்ந்தார் .வீட்டில் இருந்தவர் வந்தது கண்டு மகிழ்வுகொண்டனர். படகில் கிடந்த கல்லை, வீட்டு படிக்கல்லாக போட்டுவைத்தார். நடந்து நடந்து, பாசி நீங்கி சூரிய ஒளி பட்டவுடன், கல் மின்னியது. பாண்டிய மன்னர்க்குபரிசாகஅதனைக் கொடுத்தார்,  சோதித்துப்பார்த்த அரசன் மரக்கத்தக்கல் எனஅறிந்தான்.

மரைக்காயருக்கு பொற்காசுகளை அளித்தான். நடராசர் சிலை வடிக்க சிற்பியைத் தேட, வந்த சிற்பி முடியாது எனச் சொல்ல, இறைவனை வேண்டினார். சித்தர் சண்முகவடிவேலர் தான் வடித்துத் தருவதாகச் சொல்ல, மரகத லிங்கம் உருவானது. ஐந்தரை அடி உயரமுள்ள சிலை, ஒன்றரை அடி பீடத்துடன் உருவானது.

சந்தனக்காப்பு:

மரகத லிங்கம், வருடம் முழுதும் சந்தனக்காப்புடன் இருக்கும். நடராஜருக்கு, ஆண்டுக்கு ஒருநாள், மார்கழிமாதம் மிருக சீஷ நட்சத்திரத்திற்கு அடுத்த திருவாதிரை அன்று புது சந்தனக்காப்பு சாற்றப்படும்.

திருவாதிரைக்கு முதல்நாள் இறைவன் திருமேனியைச் சந்தனம் களைந்த திருக்கோலத்தில் காணலாம். முப்பத்திரண்டு வகை அபிஷேகம் நடக்கும். களைந்த சந்தானம் மருத்துவகுணம் கொண்டது என்று ,வணங்க வருபவர்கள் நம்பி வாங்கிச்செல்கின்றனர்.

ஏன் சந்தனகாப்பு?:

மரகதக்கல்லின் மீது ஒளி பட்டாலோ, அதிர்வலை ஏற்படுத்தும் ஒலி கேட்டாலோ மரக்கதக்கல் சேதமடைந்துவிடும்; என்பதாலேயே சந்தனகாப்பு சாத்தப்படுகிறது. இறைவன் திருமுன்பு மத்தளம் வாசிக்கப்படுவதில்லை.

இத்தகைய சிறப்புடைய உத்தரகோசமங்கைபற்றி ,மாணிக்க வாசகர் திருவாசகத்தில், திருப்பொன்னூசலில், “ ஊராகதந்தருளும் உத்தரகோசமங்கைஎன்று குறிப்பிடுகிறார்நாமும் வழிபட்டுச் சிவனின் அருள்பெறுவோம்!








No comments:

Post a Comment