Wednesday, February 28, 2018

' கடவுள் என்று ஒருவர் நிஜமாகவே இருக்கிறாரா ? '



' கடவுள் என்று ஒருவர் நிஜமாகவே இருக்கிறாரா ?  '
இந்த கேள்விக்கு விடை தெரியுமா உங்களுக்கு ? ஆம் என்றோ இல்லை என்றோ எவ்வாறு நிரூபிப்பீர்கள் ? கீழே உள்ள கதையை படியுங்கள் !



 ஒரு ரயில் பயணத்தில் பைபிள் படித்து கொண்டு இருந்த ஒருவரை , சக பயணியான ஒரு விஞ்ஞானி சதா பேச்சு கொடுத்து தொந்தரவு செய்து கொண்டே இருந்தார். அறிவியல் இத்தனை வளர்ச்சி அடைந்த பிறகும், நீங்கள் இன்னும் இந்த பைபிள், மதம், கடவுள் போன்ற பழங்கால மரபு சார்ந்த விடையங்களை நம்பி கொண்டு இருக்கின்றீர்களா? இன்றும் உங்களை போன்ற மனிதர்களை பார்ப்பதற்கு எனக்கு ஆச்சரியமாக உள்ளதுஎன்று கேலியாக பேசிய விஞ்ஞானி, தன்னுடைய முகவரி அட்டையை பைபிள் படித்து கொண்டு இருந்தவரிடம் கொடுத்தார். தாங்கள் விரும்பினால், முன் அனுமதி பெற்று ஒரு முறை என்னை வந்து சந்தியுங்கள். வாழ்க்கை என்ன? அதை எவ்வாறு அறிவு பூர்வமாக அணுக வேண்டும் என்பதை உங்களுக்கு அறிவியல் ரீதியாக புரிய படுத்துகிறேன்என்றார். அவரும் அமைதியாக விஞ்ஞானி கொடுத்த அட்டையை வாங்கி தன் பைபிளில் வைத்து கொண்டார்.

ரயில் பயண முடிவில் இறங்க தயாரான விஞ்ஞானி, "ஆமாம், நீங்கள் உங்களை பற்றி எதுவும் சொல்ல வில்லையே, உங்கள் பெயர் ?என்று விசாரித்தார். பைபிள் படித்து கொண்டு இருந்தவர், “என் பெயர் தாமஸ் ஆல்வா எடிசன்என்று பணிவாக உரைத்தார்.

தன் சக பயணியானவர், அனைத்து கண்டுபிடிப்புகளின் தந்தை ( Who is considered as the father of all inventions ) என்று அறியப்பட்ட மேன்மை பொருந்திய விஞ்ஞானி, தாமஸ் ஆல்வா எடிசன் என்பதை கேட்டு திடுக்கிட்ட விஞ்ஞானி, ஐயா, உங்களை வந்து சந்திக்க எனக்கு நேரம் ஒதுக்கி தாருங்கள்என்று கேட்டுக் கொள்ள, எடிசனும் செவ்வாய் கிழமை வந்து என்னை பாருங்கள் என்று சொல்லி விட்டு கிளம்பினார்

குறிப்பிட்ட நாளன்று தாமஸ் ஆல்வா எடிசனின் அறிவியல் ஆராய்ச்சி கூடத்திற்கு சென்ற விஞ்ஞானி, அங்கு வைக்க பட்டு இருந்த சூரிய குடும்பத்தின் மாதிரியை ( Model of Solar System ) கண்டு வியந்து, இதை செய்தது யார் என்று நான் தெரிந்து கொள்ளலாமா ?” என்று கேட்டார். ( இந்த சூரிய குடும்ப மாதிரி எந்திரம், இன்றும் எடிசனின் பொருட்காட்சியில் பாதுகாப்பாக பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளது )

புன்னகை பூத்த எடிசன், "அதை யாரும் செய்யவில்லை, நேற்று இரவு அது இங்கு இல்லை, இன்று காலை தான் திடீர் என்று வந்ததுஎன்றார்

மேலும் ஆவல் அடைந்த விஞ்ஞானி, “ சார், நான் உண்மையாகவே கேட்கிறேன், இதை வடிவமைத்தது யார் ?” என்றார்.

எடிசன் மீண்டும், "நானும் உண்மையாக தான் சொல்கிறேன், நான் காலை வந்த போது திடீர் என்று இது இருந்ததுஎன்றார். பொறுமை இழந்த விஞ்ஞானி, “சார், யாரும் உருவாக்காமல் திடீர் என்று ஒன்று தானாக உருவாவது சாத்தியமில்லை என்பது நம் இருவருக்கும் நன்றாகவே தெரியும் என்று சற்றே சினத்துடன் கூறினார்.

எடிசன் இப்போது அமைதியாக, “ உங்களை போன்ற ஆராய்ச்சியாளர்கள் அனைவரும், இந்த ஒட்டு மொத்த பிரபஞ்சமே தானாக தான் உருவானது என்று நம்பும் போது, ஒரு சிறிய கருவி தானாக உருவாவதும் சாத்தியம் தானே ?என்று பொட்டில் அடித்தாற்போல் கேட்டார்.

"விளைவு என்று ஒன்று இருந்தால், காரணம் என்று ஒன்று இருந்தே ஆக வேண்டும்". அதாவது, இந்த உலகில் எந்த ஒரு காரியம் நடந்தாலும் அதற்கு நிச்சயம் ஒரு காரணம் உண்டு. அந்த காரணத்திற்கு கர்த்தாவும் உண்டு.

படைப்பு என்று ஒன்று இருந்தால், படைத்தவன் என்று ஒருவன் இருந்தே ஆக வேண்டும் என்கிற உண்மையை இவ்வாறு உணர்த்தினார் எடிசன்.  ரிக் வேதததில் சொல்வதை போல, "We don't know what it is.. But we know it is."

நீதி : 
நம்மை சுற்றி படைப்புகள் இருக்கும் போது படைத்தவன் இருந்தே ஆக வேண்டும் என்பது உண்மை தானே !

பேசுவது கிளியா ?



பேசுவது கிளியா ?

ஒருவர் தன் வீட்டில் வளர்க்க கிளி வாங்க விரும்பினார். தன் வெகு நாள் ஆசையை பூர்த்தி செய்ய கிளிகள் விற்கும் கடைக்கு சென்றார். பல்வேறு வடிவில், நிறங்களில் அங்கு கிளிகள் இருந்தன. அங்குள்ள விற்பனையாளனிடம் சென்று விசாரிக்க துவங்கினார்.

சில கிளிகளின் கழுத்தில் ஆயிரம், இரண்டாயிரம் என விலை தகடுகள் மாட்டி இருந்தன. அவர் பார்வையிட்டு கொண்டே போனார். அப்போது சில கிளிகள் கழுத்தில் நம்ப முடியாத விலைகள் காணப்பட்டன. ஆச்சரியத்துடன் அவர் விற்பனையாளனிடம் விசாரித்தார்.

"ஏன்ப்பா ! இந்த கிளி அப்படி என்ன செய்யும், இருபதாயிரம்னு விலை போட்டு இருக்கே ? " என கேட்டார்

அதற்கு அந்த விற்பனையாளன்

"சார், இந்த கிளிக்கு பகவத் கீதை மனப்பாடமா தெரியும் சார். அப்படியே ஒப்பிக்கும்." என கூறினான்.

"அப்படியா ? பரவா இல்லையே ! சரி அந்த கிளி கழுத்துல முப்பதாயிரம் விலை போட்டு இருக்கே, அது என்ன பண்ணும் ? " என விசாரித்தார்.

"சார், அது இன்னும் சூப்பர் கிளி சார். கீதை, குரான், பைபிள் எல்லாம் அர்த்ததோட சொல்லும் சார்"

"அஹா ! அதிசயமனான கிளிதான்ப்பா" என கூறி மேலும் பார்வையிடும் பொழுது ஒரு சிறிய நோஞ்சான் கிளி கழுத்தில் ஒரு லட்சம் என்ற விலையை கண்டார்.

"என்னப்பா, இந்த கிளி பாக்குறதுக்கே நல்லா இல்லயே, ரொம்ப சின்னதா, நோஞ்சானா வேற இருக்கு, இதுக்கு எதுக்குப்பா ஒரு லட்சம் ? இது அப்படி என்னப்பா ஸ்பெஷலா செய்யும் ? " என கேட்டார்.

அந்த விற்பனையாளன் " சார் ! எனக்கு தெரிஞ்சி இதுக்கு கீதை, குரான் எல்லாம் சொல்ல தெரியாது. சும்மா தான் இருக்கும். இறக்கை கூட உதிர்ந்து போச்சு. ஆனா , அந்த ரெண்டு கிளியும் இத தான் "எஜமான்" னு கூப்பிடும் சார் !, அதுக்காக தான் சார் இது விலை ஒரு லட்சம்" என போட்டானே ஒரு போடு. நம் ஆசாமி மயங்கியே விட்டார்.

நீதி : பதவிக்கும் , அறிவிற்க்கும் தொடர்பில்லை !