அந்தணர் குலத்தில் பிறந்து முதலில் இசை மேடை ஏறிப் புரட்சி செய்தவர் பட்டம்மாள்
காஞ்சிபுரம்
அருகே தாமல் என்ற கிராமத்தில்
1919-ஆம் ஆண்டு இந்த இசைத்
தாரகை உதித்தது. தந்தை கிருஷ்ணசாமி தீட்சிதர்.
தாய் ராஜம்மாள். இருவருமே சங்கீதத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்கள்.
தாய் ராஜம்மாள் கச்சேரி செய்யும் அளவுக்கு
சங்கீதம் அறிந்தவர்தான். ஆனால் அன்றைய வழக்கப்படி
குடும்பப் பெண்கள் பாட்டும், நடனமும்
கற்க அனுமதிக்கப்படவில்லை. இந்த வகையில் பார்த்தால்
அந்தணர் குலத்தில் பிறந்து முதலில் இசை
மேடை ஏறிப் புரட்சி செய்தவர்
பட்டம்மாள்தான். அதேபோல முதலில் நாட்டியமேடை
ஏறிப் புரட்சி செய்தார் ருக்மணி
அருண்டேல். இவர்களது அரங்கப் பிரவேசத்துக்குப் பின்னர்தான்
அந்தணர் குலத்திலிருந்து பலர் மேடை ஏறத்
தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.ஆரம்பத்தில்
பட்டம்மாள் திட்டமிட்டு ஸரளி, ஜண்டை வரிசை,
கீதம், வர்ணம் என்று வழக்கமான
பாணியில் இல்லாமல் சங்கீதத்தைக் கற்றார். கரணம் தப்பினால் மரணம்
என்கிற வகையில் வரும் நிரடான
பல்லவிக் கணக்குகளெல்லாம் பட்டம்மாளின் விரல் நுனியில் சேவகம்
செய்தன.லய சாம்ராஜ்யத்தை கட்டி
நிர்வகிக்கும் அவரது அபூர்வத் திறமை
எவரையும் பிரமிக்க வைப்பது. இந்தத் திறமையால்தான் அன்றைய
பெரிய பெரிய சங்கீத ஜாம்பவான்களிடம்
பிரம்ம ரிஷிப் பட்டம் பெற்றார்.
ஆகஸ்ட் 15 அன்று முழுவதும் தமிழக
ரேடியோவில் தேசபக்திப் பாடல்களை இடைவிடாமல் பாடும் அளவுக்குப் புகழ்
பெற்றார். உள்ளூர் பாராட்டுகள் முதல்
சங்கீத கலாநிதி, பத்ம விபூஷண் வரை
பல்வேறு விருதுகளையும் பெற்றார்.கர்நாடக சங்கீதத்தில் லட்சியம்,
லட்சணம் என்று இரண்டு அம்சங்களைச்
சொல்வார்கள். அப்பழுக்கின்றி இவ்விரு அம்சங்களையும் தம்மிடத்தே
கொண்டு ஜொலித்த கலைஞர்கள் மிக
அபூர்வம். அப்படி ஜொலித்த ஓர்
அபூர்வ தாரகை பட்டம்மாள். வெறும்
தாரகை மட்டுமல்ல... அவர் ஒரு மார்க்கதரிசியுமாவார்.
சுத்தத்துக்கு இன்னொரு பெயர் பட்டம்மாள்;
அழுத்தம், பூரண ராகபாவம்; சாகித்ய
பாவம்; அதுவும் சாகித்யத்தை தெள்ளத்
தெளிவாய் உச்சரிக்கிற விஷயத்தில் பட்டம்மாவுக்கு நிகர் அவர்தான். வழவழா
விவகாரமே அவரிடம் பார்க்க முடியாது.வராளி ராகத்தில் தியாகராஜரின்
"ஏடி ஜென்மமிதி' கிருதியை டி.கே.பி.
பாடிக் கேட்டவர்களுக்குத் தெரியும். இந்தக் கிருதியில் ""என்ன ஜென்மமடா
இது ராமா'' என்று ஏங்கித்
துக்கிக்கிறார் தியாகராஜர். அவரது ஆத்ம வேதனையை
வராளியின் ஜீவன் பொங்கி வழியத்
தன் இறைஞ்சுகின்ற குரலில் சாகித்ய பாவம்
பொலியப் பொலிய டி.கே.பி. பாடுகிறபோது கல்
நெஞ்சும் நெகிழ்ந்து கண்ணீர் மல்கும். இனி
இந்த சங்கீத ரசவாதத்தை யார்
நிகழ்த்துவார்? இனி யார் அப்படிப்
பாடிக் கேட்கப் போகிறோம்?கடந்த
நூற்றாண்டில் மூன்று இசைக் குயில்கள்
கர்நாடக இசை மேடைகளில் கானமழை
பொழிந்தனர். ."நாம் இருவர்' திரைப்படத்தில்
டி.கே. பட்டம்மாள் பாடிய
"ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே' பாடல்தான்
இந்தியா சுதந்திரம் பெற்ற அந்த நன்னாளில்,
சென்னை நகரத் தெருக்களில் நள்ளிரவு
நேரத்தில் ஆடிப்பாடி மகிழ்ந்த அனைவரின் உற்சாகப் பாடலாக இருந்தது
No comments:
Post a Comment