Tuesday, February 13, 2018

கேட்டும் கிழவியும், கொஞ்சுன்டு ஈரப்பசையும்....



கேட்டும் கிழவியும், கொஞ்சுன்டு ஈரப்பசையும்.... 


மாநகராட்சி பள்ளி
வாயிலில் கூடைக்குள்
கடை வைத்திருக்கும் கிழவி,
கடைக்குள்
காயும் கொய்யா,
வறன்ட நெல்லி,
வதங்கி கருத்த நவா,
தோல் சுருங்கிய மாம்பழம்.
உயிரற்ற கேட்டருகே உயிருள்ள கிழவி.

சரசரக்கும் வாகனங்கள்,
நிறுத்தத்தில் நிற்க்கும் உயிர்கள்,
அலைந்து திரியும் பார்வைகள் உயிருள்ள ஜீவனில்
உயிர்ப்பின்றி நகர்கிறது உயிரை உயிரற்றதாய் பதிவு செய்து..


உயிரற்ற கேட்டின் பாதியாகிவிட்ட
உயிரின் முன்னால் நேர் எதிர்த்திசைகளை கடக்கும்
உயிர்களின் எண்ணிக்கை இப்பொழுது எத்தனை லட்சத்து எத்தனையோ? எண்ணிக்கை பெருக்கல் விகிதத்தில் உயர்கிறது.


கடைக்குள் எஞ்சியுள்ளது
மறுநாள் வெயிலுக்காக விற்காத பழங்களில் ஈரம்.......
 

No comments:

Post a Comment