Friday, February 2, 2018

எங்கே செல்கிறது தமிழகம்?



எங்கே செல்கிறது தமிழகம்


கடந்த சில மாதங்களாக வரும் தமிழகச் செய்திகள் அதிர்ச்சியூட்டுபவயாக உள்ளன.
  1. காலாவதியான மருந்து விற்பனைகுற்றம்சாட்டப்பட்டவர் சென்னை மருந்து விற்பனையாளர் சங்கத் தலைவர்.
  2. காலாவதியான உணவுப்பொருள் விற்பனை
  3. போலி நிலப்பட்டா
  4. போலித் தங்கநாணய விற்பனை (Multilevel marketting)
  5. போலி மதிப்பெண் சான்றிதழ்
  6. போலி காவல் நிலையம்
கடந்த முறை சென்னை வரும்பொது இரயிலில் வாங்கிய மூன்று திரைபடக் குருந்தகடுகள் முதல்முறை உபயோகிக்கும் போது வெற்றுத் தகடுகள் என்பதை அறிந்தேன்.  
ஏன் மக்களின் எண்ணம் திட்டமிட்டு ஏமாற்றும் அளவுக்கு தரம்
தாழ்ந்துவிட்டது, வருமையா? உல்லாச வாழ்க்கைக்கான மோகமா? மனதநேயம் அற்ற தன்மையாநியாயம் தர்மம் என்ற சொற்கள் மனத எண்ணங்களில் அரிதாகிவருகிறதா?
இதுபோன்ற நிகழ்வுகள் சமூகத்தில் உள்ள ஆழ்ந்த பிரச்சனைகளுக்கான வெளிப்பாடுகளாகவே பார்கிறேன்மனிதவளம், மனிதநேயம், நட்பு, அன்பு, பாசம், சகோதரத்துவம், சமத்துவம் இதன் அவசியம்  உணரப்பட வேண்டும் வரியவனுக்கும் செல்வந்தனுக்குமான இடைவெளி குறைக்கப்படவேண்டும்
 

No comments:

Post a Comment