சர்க்கரை நோய் உணவு முறைகள்:
1. இனிப்பு சுவையுடைய உணவு பொருட்களை அறவே தவிர்த்தல்
2. தேன், கருப்புக்கட்டி போன்ற இயற்கை இனிப்பு உணவுகளையும் தவிர்த்தல்
3. அதிக மசாலா சேரும் உணவுபொருட்களை தவிர்த்தல் அல்லது அளவு குறைவாக உண்ணுதல்
2. தேன், கருப்புக்கட்டி போன்ற இயற்கை இனிப்பு உணவுகளையும் தவிர்த்தல்
3. அதிக மசாலா சேரும் உணவுபொருட்களை தவிர்த்தல் அல்லது அளவு குறைவாக உண்ணுதல்
4. எண்ணெய் சேரும் உணவுகளை குறைத்து உண்ணுதல்
5. நெய், வெண்ணெய், டால்டா சேரும் பதார்த்தங்களை தவிர்த்தல்
6. குளிர்பானங்களை தவிர்த்தல். பெப்ஸி, கோகோ கோலா, மிராண்டா, 7அப் போன்ற அனைத்துவகை குளிர்பானங்களையும் தவிர்த்தல்.
7. காபி, டீ போன்றவற்றில் சர்க்கரை நீக்கி அருந்தவும்.
8. பால் பொருட்களை முறையாக பயன்படுத்தவும்.
9. கிழங்குகளை உணவில் தவிர்க்கவும். உருளைக்கிழங்கு,சேனைக்கிழங்கு,சேம்பு கிழங்கு, கருணை கிழங்கு போன்றவற்றை தவிர்க்கவும்.
10. காரட், பீட்ரூட் போன்றவற்றை தவிர்க்கவும்.
11. பழங்களை அதிகம் தவிர்க்கவும். மாம்பழம், வாழைப்பழம், சப்போட்டா, திராட்சை பழம், ஆரஞ்சு பழம், அன்னாசி பழம் இவற்றை தவிர்க்கவும்.
12. கொய்யா, ஆப்பிள், பப்பாளி இவைகளை முறையாக உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
13. ஐஸ் கிரீம், சாக்லேட், ஸ்வீட்ஸ், பால் ஸ்வீட்ஸ் போன்றவைகளை அறவே தவிர்க்கவும்.
14. எண்ணெய் அதிகம் சேரும் கொழுப்பு பொருட்களை குறைவாக உணவில் சேர்க்கவும்.
15. அன்றாட உணவில் கீரை அதிகம் சேர்க்கவும். குறிப்பாக சிறு கீரை, அரைக்கீரை, முருங்கைக் கீரை, வெந்தயக் கீரை இவைகளை அதிகம் சேர்க்கவும்.
16. கேழ்வரகு, சோளம், சாமை அரிசி உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
17. புரத சத்துப் பொருட்களான கொண்டைக் கடலை, சிறு பயறு,மொச்சை, தட்டாம் பயறு, கொள்ளு இவைகளை உணவில் அதிகம் சேர்க்கவும்.
18.கத்தரிக்காய், புடலங்காய், முருங்கைக்காய், அவரைக்காய், வெள்ளரிக்காய், சுரைக்காய், தடியங்காய், வெண்டைக்காய், முட்டைக்கோஸ், பீர்க்கங்காய் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
19. கோதுமை சேரும் உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் எளிதில் பசிக்காது.
20. உணவின் அளவை குறைத்து உணவு உண்ணும் வேளையை அதிகமாக மாற்றிக் கொள்ளவும். தினமும் மூன்று வேளை உண்ணுவதை நான்கு வேளையாக மாற்றி உணவு அளவை குறைத்துக் கொள்ளவும்.
No comments:
Post a Comment