Sunday, February 4, 2018

சென்னை அறிமுகம்.





                  17ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் British East India Company இந்தியாவில் துணி தயாரிக்கும் நிருவனம் தொடங்க நினைத்து. 1629 ல் புழல் ஏரியில் இருந்து வடக்கே சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் துகாரஜுபட்டிணம் என்ற இடத்தில் ஆரம்பித்து. அப்போது ஐரோப்பாவில் calico cloth எனப்படும் துணிக்கு அதிக வரவேற்பு இருந்த்து. ஆனால் அங்கு தயாரிக்கபட்ட துணி எற்றுமதி செய்யபடும் அளவிற்கு தரம் இல்லாததால் அவர்கள் சற்று தெற்கே தேட ஆரம்பித்தினர். இந்த கால கட்டத்தில் ஆங்கிலேயரின் தலமையகம் மசூலிபட்டினமாக இருந்த்து. துகாரஜுபட்டிணம் ,Francis Day என்பவரின் கீழ் இருந்தது.


                        கோரமண்டல கடற்கரை , விஜயநகர பேரரசு ஆட்சியின் கீழ் இருந்த்து. விஜய நகர பேரரசின் ஒரு பகுதியான சந்திரகிரி-வேலூர் பகுதியை விஜய நகர பேரரசின் வழியில் வந்த வெங்கடராயர் என்பவர் ஆண்டு வந்தார். அந்த கால கட்டங்களில்கவர்னர்களாக நாயக்கர்கள் ஆண்டு  வந்தார்கள்.
அப்படி  ஒரு கவர்னரான  வெங்கடாதிரி நாயக்கர் என்பவர் வந்தவாசி கோட்டத்தை ஆண்டு வந்தார். இந்த வந்தவாசி கோட்டத்தின் கீழ் தான் புழல் ஏரி முதல் போர்ச்சுகீசிய பகுதியான சாந்தோம் வரை தன்னுள்ளே கொண்டுருந்தது.
                           இந்த வெங்கடாதிரி நாயக்கரின் சகோதரர் அய்யப்பா நாயக்கர் , பூந்தமல்லி பகுதியை கவனித்து கொண்டார். திம்மப்பா என்பவர் இந்த அய்யப்ப நாயக்கரின் நண்பர். இவருக்கு ஆங்கிலமும் தெரியும் ஆதலால் ஆங்கிலேயரான் Francis Dayக்கு மொழிபெயர்பாளாராகவுன் இருந்து வந்தார்.  அய்யப்ப தனது சகோதரரிடம் பேசி அவரை 3 கிலோமீட்டருக்கான இடத்தை ஆங்கிலேயருக்கு கொடுக்கும்படி சம்மதிக்க வைத்தார். அதற்கு ஈடாக வணிக பலன்கள், அரேபிய குதிரைகள் மற்றும் இராணுவ பாதுகாப்பு ஆகியவை கிடைக்கும்மெண்டு கூறினார்.

                        ஆகஸ்டு 22, 1639ம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தமானது கடற்கரையை ஒட்டிய சிறிய கிரமமான மடராஸ்பட்டிணம் என்ற கிராமத்தை சேர்ந்த மற்றும் அதன் அருகே உள்ள , 3 மைல் நீளத்திற்கான பகுதியில் பாக்டரியும் சிறிய கோட்டையும் கட்டிகோள்ள் அனுமது தரப்பட்டது. இந்த ஒப்பத்தத்தின் ஆயுள் 2 வருடம் மட்டுமே.

                                  தங்களுக்கு ஒதுக்கபட்ட பகுதியில் வீடுகளும், கோட்டையும் கட்டப்பட்டது. அந்த கோட்டக்கு புனித ஜார்ஜ் கோட்டை என்றும் பெயரிடப்பட்டது. இதனிடையே Francis Day என்பவர் மாற்றப்பட்டு Thomas Ivy என்பவர் பொறுப்பேற்றார். ராஜாவாக வெங்கடாரயருக்கு பதில் அவருடைய சகோதரர் வெங்கடராயலு என்பவர் பொருப்பேற்றார். 1642ம் ஆண்டு இந்த ஒப்பந்தம் மறுபடியும் உயிர்பெற்றது. 1645ம் ஆண்டு நரிமேடு என்னும் பகுதியும் ஒப்ப்ந்த்தில் இனைக்கப்பட்டது. மேலும் இந்த ஒப்பந்ததில் கூடுதலாக administer justiceம் வழங்க பட்டது. இதுவே பிரிட்டீஷ் கிழக்கிந்திய கம்பெனி ஆனது.

                               1687ம் ஆண்டு இந்த பிரிட்டீஷ் கிழக்கிந்திய கம்பெனியின் கவர்னராக ஆண்டு எலிகு ஏல் (Elihu Yale) என்பவர் இருந்தார். இவர் கிழக்கிந்த்ய கம்பெனியின் இரண்டாவது கவர்னாவர்.  இவர் கவர்னாராக இருந்த போது ரகசியமாக வானிகம் செய்து அதிக சொத்து தனது பாக்கெட்டை நிரப்பி கொண்டார். இது கிழக்கிந்த்ய கம்பெனியின் சட்டதிட்டதுக்கு எதிராக இருந்ததால் அவர் அங்கு கவர்னர் பொருப்பில் இருந்து நீக்கபட்டு இங்கிலாந்த்க்கு அழைக்கபட்டார்.

                              1718ம் ஆண்டு Cotton Mather என்பவர் அமெரிக்காவில் , கனெக்டிகட் என்ற மாநிலத்தில் தான் நடத்தி வரும் பள்ளிக்காக நிதி தரும்படி கேட்டுக்கொண்டார். அதற்கு யேல், பொருட்கள் அடங்கிய பெட்டியை அவர்க்கு அணுப்பிவைத்தார். அந்த பொருலை விற்றதில் சுமார் 560 பவுண்ட் டாலர் கிடைத்து. யேல் கொடுத்த பொருலுக்கு நன்றிகடனான ஒரு கட்டிடத்திற்கு "Yale" என்று வைத்தன்ர். ஆனால் பின்னாளில் அந்த பள்ளிதான் Yale University  என்ற மிகப்பெறிய பல்கலைகழகமாக இருக்கிறது. இன்றைய "Yale University"ன் சொத்து மதிப்பு சுமார் 20 பில்லியன் டாலர் (அதாவது 1 லட்சம் கோடி). இன்று ஹார்வேர்டுக்கு இனையாக மதிக்கபடுகின்றது.

               நரிமேட்டுக்கு பிறகு பல பகுதிகள் British East India Companyன் கீழ் இனைக்கபட்டன. முதன் முதலில் புனித ஜார்ஜ் கோட்டை கட்டிய பிறகு ஆங்கிலேயர்கள் அங்கு வசிக்க தொடங்கினர். அந்த பகுதிக்கு ஒயிட் டவுன் என்று அழைக்கபட்டது. அதன் அருகே இந்தியர்கள் வசித்தபகுதி ப்ளாக் டவுன் என்று அழைக்கபட்டது. இந்த பகுதியில் துறைமுகத்தில் வேளை செய்யும் தொழிலார்கள் தங்கி இருந்த்தன்ர்.

                            1746 ம் ஆண்டு மெட்ராசை பிரென்சு காரர்கள் கைப்பற்றினார்கள். அப்போது அவர்கள் சேப்பாக்கம் மற்றூம் பிளாக் டவுனை தரைமட்டம் ஆக்கினார்கள். பிறகு 1749ம் ஆண்டு அங்கிலேயர் மீண்டும் கைப்பற்றினார்கள். அடித்த 30 ஆண்டுகளுக்கு மெட்ராச பல தாக்குதலுக்கு உட்பட்டது. 1783ம் ஆண்டு கட்டபட்ட புனித ஜார்ஜ் கோட்டைதான் தற்போது இய்ங்கும் சட்டசபை.

                                பல தாக்குதலுக்கு பிறகு மெட்றாசை தனது முழு கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தபிறகு, அப்போது உள்ளுர் மக்களால் சென்னைபட்டிணம் என்று அழைக்கப்பட்ட பகுதிகளான திருவலிக்கேணி, எக்மோர், புரசைவாக்கம் மற்றூம் சேத்துப்பட்டு பகுதிகளை தங்களுடன் இனைத்து கொண்டார்கள். 18ம் நுற்றாண்டில் மெட்றாஸ் ஒரு முக்கியமான கடற்படை தளமாக இருந்தது.

                    மெட்றாஸ் துறைமுகத்தின் வளர்ச்சியானது , இந்தியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையெ ஆன வாணிகம் வளரவும் செய்தது.   1788ம் ஆண்டு தாமஸ் பாரி என்பவர், மெட்றாஸுக்கு வந்து EID Parry என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார்.

                         1797ம் ஜான் பின்னி என்பவர் இந்தியாவுக்கு வந்தார். அவர் 1814ம் ஆண்டு Binny & Co என்ற துணி தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கினார்.  பென்சர் என்பவர் 1864ம் ஆண்டு சிறிய வியாபரம் செய்ய ஆரம்பித்து பிறகு ஆசியாவிலேயெ மிகப்பெரிய Departmental store என்று அழைக்கபடும் பல்சரக்கு கடையை ஆரம்பித்தார். இது பிற்காலத்தில் Spencer & Co என்று அழைக்கபட்டது. 1983ம் ஆண்டு இருந்த கட்டிடம் தீக்கிரையாகியது. பிறது அது முழுவதுமாக இடிக்கப்பட்டு தற்போது சென்னையின் Landmark விளங்கும் Spencer Plaza கட்டப்பட்டது.



No comments:

Post a Comment