பழமொழி
இப்போதெல்லம் பழமொழிகளை சொல்பவர்களை பார்பதே அரிதாகி விட்டது.
இயல்பாக பழமொழிகளை பயன்படுத்துபவர்கள் பலரை பார்த்திருக்கிறேன். சமீபத்தில் இனையத்தில்
பழமொழிகளின் தொகுப்பை இங்கே கன்டேன்
இன்றும் கூட பலர்பயன்படுத்தும் சில
பழமொழிகள்
ஆடத் தெரியாதவன் கூடம் கோணல்ன்னு சொன்னானா.
என்னையும் தூக்கி விட்டு என்
இடுப்பையும் தூக்கி விட்டா செனக்காடல்லாம்
பொன்க்காடா மாத்திடுவேன்.
அக்காடான்னு அக்கா வீட்டுக்கு வந்தா
அவ இழுத்து அக்கா புருஷன்
மேல போட்டாளா
அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது
வீடு.
அரசனை நம்பி புருசனை கைவிடாதே
அழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது.
அழுத பிள்ளை பால் குடிக்கும்
ஆனை வரும் பின்னே. மணி
ஓசை வரும் முன்னே
ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு
ஒரு காலம்.
ஆனைக்கும் அடிசறுக்கும்.
ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.
இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.
இராமன் ஆண்டா என்ன? இராவணன்
ஆண்டா என்ன?
இரும்பு பிடித்த கையும் சிரங்கு
பிடித்த கையும் சும்மா இரா.
இளங்கன்று பயமறியாது
ஊர் வாயை மூட உலைமுடி
இல்லை.
எங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு
வருகிறாய், உங்கள் வீட்டுக்கு வந்தால்
என்ன தருவாய் ?
எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு.
எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன்
பிச்சை கொடுப்பானா?
எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.
எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்.
எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம். எருமை வாங்கும்
முன்னே நெய் விலை கூறாதே.
எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
எறும்பு ஊர கல்லுந் தேயும்.
எலி வளை யானாலும் தனி
வலை வேண்டும்.
எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன்
பாட்டைக் கொடுத்தான்
பெண் புத்தி பின் புத்தி.
ஏழைபேச்சு அம்பலம் ஏறாது
ஐயர் வருகிற அமாவாசை நிற்குமா?
ஒரு கை (அல்லது வெறுங்கை)
முழம் போடுமா?
கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி
கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா?
கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?
கடுகு போன இடம் ஆராய்வார்,
பூசுணைக்காய் போன இடம் தெரியாது.
கண் கண்டது கை செய்யும்.
கரணம் தப்பினால் மரணம்.
No comments:
Post a Comment