அமைதியாக துயரச் சுமைகளைச் சுமந்த நாயகி ஸ்ரீவித்யா
எழுபதுகளில் திரைப்படத் துறையில் நுழைந்து தனக்கென்று ஒரு முத்திரையைப் பதித்துச் சென்றுள்ளார் ஸ்ரீவித்யா. தனது சொந்த வாழ்க்கையைச் சோகங்கள் பல கவ்வினாலும் திரையில் சோபித்தார்.
ஒவ்வொரு பாத்திரத்திலும் மிடுக்கோடும் அந்தப் பாத்திரத்தின் குணத்தோடு ஒட்டி தத்ரூபமாக நடித்து திரைப்பட ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார்.
தமிழகத்தில் இசையில் தடம் பதித்த எம்.எல். வசந்தகுமாரியின் புதல்வி என்ற நிலையில், பாட்டிலும், பரதத்திலும் திறமை பெற்றவராக விளங்கினார். அறிவு, அழகு, திறமை, புகழ், வசதி என இருந்தும் துயரத்தை அமைதியாக சுமந்தவர்தான் ஸ்ரீவித்யா. சம்பள விஷயங்களில் திரைத்துறையிலும், சின்னத்துறையிலும் மற்றவர்களைப் போல கறார் காட்டமாட்டார். 200 தமிழ்ப் படங்களிலும், 400 மலையாளப் படங்களிலும் நடித்தவர். கேள்வியின் நாயகனே என்ற திரையிசைப் பாடலில் ‘பயணத்தை நடத்திவிடு’ என்ற வரிக்கேற்றவாறு துயரத்தை சுமந்துகொண்டு தன்னுடைய அமைதியான வாழ்கையை இளமையிலேயே சுமந்து பயணத்தை நடத்திவிட்டார். ஏழு சுரங்களுக்குள் எத்தனை ராகம் என்றும், அபூர்வ ராகங்கள் போட்ட முடிச்சைப் போன்று அவருடைய கவலைகளும், பிரச்னைகளும் ரகசியமாகவே நெஞ்சுக்குள் மூடி வைத்துக் கொண்டார். இயற்கைத் தாயினுடைய கருணையில்லாமல் அவர் இவ்வுலகைவிட்டு சென்றாலும், சொல்லத்தான் நினைக்கிறேன், அபூர்வ ராகங்கள் என்ற பல திரைப்படங்கள் மூலம் இன்றும் அவர் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஆன்மீகத்தில் பற்று இருந்தாலும், தமிழ் இலக்கியங்கள் மீது அவருக்கு பார்வை உண்டு
மலையாள
பூமியில் பிறந்த நடிகை பத்மினி
தமிழ் மண்ணில் மறைந்தார். தமிழ்
மண்ணில் பிறந்த நடிகை ஸ்ரீவித்யா
மலையாள பூமியில் மறைந்தார். இவ்வளவு திறமை வாய்ந்த
இருபெரும் நடிகைகளுக்கும் தமிழக அரசின் சார்பில்
இரங்கல் கூட்டம் நடத்தப்படவில்லை என்பது
சோகத்திலும் சோகம். ஆனால் நாட்டியப்
பேரொளி பத்மினிக்கு கேரள அரசு இரங்கல்
கூட்டம் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment