தானங்களும் பலன்களும்
அன்னதானம் செய்தால் பூர்வ ஜென்ம கர்மவினைகள்
தீரும் . பித்ருக்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.
ஆடைதானம் செய்தால் தகாத உறவுக் குற்றங்கள்
நீங்கும். பெண்களின் கற்பிற்கு ரட்சையாக இருக்கும்.
காலணி தானம் செய்தால் பெரியோர்களை நிந்தித்த
பாவம் விலகும்.தீர்த்த யாத்திரை செய்த பலன் கிடைக்கும்.
மாங்கல்ய சரடு தானம் செய்தால் காமக் குற்றங்கள்
அகலும். தீர்க்க மாங்கல்ய பாக்யம் உண்டாகும் .
குடை தானம் செய்தால் தவறான வழியில் சேர்த்த
செல்வத்தினால் ஏற்பட்ட பாவம் விலகும் .
குழந்தைகளுக்கு சிறப்பான எதிர்காலம் உண்டாகும்.
பாய் தானம் செய்வதால் பெற்றவர்களை பெரியவர்களை
புறக்கணித்ததால் வந்த சாபங்கள்
தீரும்.
கடும் நோய்களுக்கு நிவாரணம் கிட்டும் .
அமைதியான மரணம் ஏற்படும் .
பசு தானம் செய்தால் இல்லத்தின் தோஷங்கள் விலகும்.
பலவித பூஜைகளின் பலன்கள் கிடைக்கும்.
பழங்கள் தானம் செய்தால் பல ஜீவன்களை வதைத்த
சாபம் தீரும். ஆயுள் விருத்தியாகும்.
காய்கறிகள் தானம் செய்தால் பித்ரு சாபங்கள் விலகும் .
குழந்தைகளின் ஆரோக்யம் வளரும்.
அரிசி தானம் செய்தால் பிறருக்கு ஒன்றுமே தராமல்
தனித்து வாழ்ந்த சாபம் தீரும். வறுமை தீரும்.
எண்ணெய் தானம் செய்தால் நாம் அறிந்தும் அறியாமலும்
செய்த கர்ம வினைகள் அகலும் .கடன்கள் குறையும்.
பூ தானம் செய்தால் அந்தஸ்து காரணமாக
பிறரை அவமதித்ததால் ஏற்படும் தீவினைகள் நீங்கும்.
குடும்ப வாழ்க்கை சுகமாகவும் , சாந்தமாகவும் அமையும்.
பொன் மாங்கல்யம் தானம் செய்தால் மாங்கல்ய
தோஷங்கள் நீங்கும். திருமண தடங்கல்கள் நீங்கும் .
நம்மால் முடிந்த தானங்கள் செய்தால் நமக்கு வளமான
வாழ்வு அமைவதோடு , நம் சந்ததிக்கும் நல்ல வளமான
வாழ்வு அமையும்.
No comments:
Post a Comment