Sunday, February 4, 2018

எப்படி கோவை தென்னகத்தின் மான்செஸ்டரானது?


எப்படி கோவை தென்னகத்தின் மான்செஸ்டரானது?



                 கோவை விடுதலை வீரர், காங்கிரஸ் பிரமுகர் சே.. நரசிம்மலு நாயுடு கல்கத்தா மாநாடு சென்றுவிட்டு கோவை, திரும்பியவுடன் கல்கத்தா போன்று கோவை தொழில் நகரமாக வேண்டும் என்று திருவேங்கடசாமி முதலியாருடன் முயற்சிகள் மேற்கொண்டார். கோவையில் விளையும் பருத்தியைக் கொண்டு தைரியமாகப் பலர் தடுத்தும் நூற்பாலைகளை 6 இலட்ச ரூபாய்க்கு தொடங்கினார். இதுகுறித்து பேசி சௌகார் சதாசிவ முதலியார் வீட்டு மாடியில் முடிவு செய்யப்பட்டது. நரசிம்மலு நாயுடு, திருவேங்கடசாமி முதலியார் ஆகியோர் செயலாளர்களாகப் பொறுப்பு ஏற்று முதலில் 10,000 பங்குகளுக்கு கையப்பமிட்டனர். பின் சென்னை சென்று மாதவராவ், ரகுநாதராயர், பாஷியம் அய்யங்காரைச் சந்தித்து அவர்களிடம் பங்குக்கு நிகராக ரூ. 50,000 பெற்று இங்கிலாந்து சென்று இயந்திரங்களை வாங்கி வந்தார்.
                                     இந்த முயற்சியில் ஸ்டேன்ஸ் என்பவர் ஈடுபட விரும்பினார். காலப்போக்கில் ஆங்கிலேயரின் தூண்டுதல், சுயநல சக்திகள் ஆதிக்கத்தில் இரவும் பகலும் உழைத்த நரசிம்மலுவை ஓரங்கட்டினர். இருப்பினும், பொறுமையாக நூற்பாலை வேலை செய்ய ஆரம்பிக்கும்வரை அனைத்துப் பணிகளையும் செய்தார். பின் தன்னுடைய சுயமரியாதைக்கு பங்கம் வராதவாறு வேதனையுடன் வெளியேறினார். நரசிம்மலு நாயுடு முயற்சியில் முதலில் 1200 தொழிலாளர்களுக்கு வேலை கிடைத்தது. நரசிம்மலு நாயுடு நன்றி அற்ற முறையில் அவரோடு இணைந்தவர்களுக்குச் செய்தது அறிந்து தொழிலாளர்கள் வேதனை அடைந்தனர். இதுதான் கோவையில் துவங்கப்பட்ட முதல் நூற்பாலையின் வரலாறு.
                         நாயுடு வெளிவந்தது அறிந்து சில செட்டிநாட்டு பிரமுகர்கள் அவரைச் சந்தித்து காளேஸ்வரா நூற்பாலையைத் துவங்கினர். இது இரண்டாவது நூற்பாலை. இந்த நூற்பாலையும் பலருக்கு வேலையைத் தந்தது.

No comments:

Post a Comment