பாட்டி
வைத்தியம்..!,
* சாதம் வடித்த
கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு
ஸ்பூன்
நெய்யில் கொஞ்சம் சீரகம்
கலந்து
குடித்தால் இடுப்புவலி நீங்கும்.
* அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு
வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.
* விரலி
மஞ்சளை
சுட்டு
பொடி
செய்து
தேங்காய்எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத
புண்களுக்கு மேல்
போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.
* கறிவேப்பிலையை அம்மியில் வைத்து
அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து,
மை
போல
அரைத்து வாயில்
போட்டு
தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு
நிற்கும்.
* சாம்பிராணி, மஞ்சள்,
சீனி
போட்டு
கஷாயமாக்கி பாலும்
வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.
* நெருப்பு சுடுநீர் பட்ட
இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.
* வெண்டைக்காயை உணவில்
அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை
பெறும்.
மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல
ஞாபக
சக்தியையும் உண்டாகும்.
* பசுவின் பால்
நூறு
மில்லி
தண்ணீரில் அதே
அளவு
விட்டு
இதில்
வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி
வைத்து
அதில்
வரும்
ஆவியைக் கண்வலி
போன்ற
நோய்கள் வந்த
கண்ணில் படும்படி பிடித்தால், கண்
நோய்கள் அகலும்.
* புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல்
குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல்
பருமன்
குறையலாம்.
* பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது
தேனும்
கலந்து
அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.
* கேரட்
சாறும்
சிறிது
தேனும்
கலந்து
பருகி
வர
கர்ப்பினி பெண்கள் வாந்தி
நிற்கும் உடல்
வலுவாகும். பித்த
நோய்கள் தீரும்.
* சுக்கு,
மிளகு,
திப்பிலி, தாமரை
இதழ்,
வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து
வடிகட்டி இரவில்
ஒரு
டம்ளர்
சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.
* முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து
பாகம்
செய்து
சாப்பிட்டால் உடல்
தளர்ச்சி விலகும்.
No comments:
Post a Comment