Sunday, February 4, 2018

சீனாவில் பொருள்களை மலிவு விலைக்கு எவ்வாறு "விற்கப்படுகிறது" - [பகுதி 2]



சீனாவில் பொருள்களை மலிவு விலைக்கு எவ்வாறு "விற்கப்படுகிறது" - [பகுதி 2] 


              இன்று நம் நாட்டில் விலைவாசி உயர்வு என்பது பஸ் டிக்கெட்டில் துவங்கி பெட்ரோல்,டீசல் என்று உயர்ந்து கடைசியில் உணவுப்பொருட்கள் வரை பரவியிருக்கிறது இந்த விலைவாசி உயர்வு என்கிறவிஷம். ஆனால் சீனாவில் மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது. கடந்த பகுதியில் சீனாவில் பொருள்களை மலிவு விலைக்கு எவ்வாறு "விற்கப்படுகிறது"  - என்பது பற்றி முதல் பத்து இனங்களை [பகுதி - 1] ல் பார்த்தோம். தற்போது மீதமுள்ள 10 இனங்களை பற்றி [பகுதி 2] பார்ப்போம்.


 எண்

 இனம்

சீனாவில்

 இந்தியாவில்

 11
 வெளிநாட்டு தொழில்நுட்பம்

மக்களின் சொத்தாக பராமரிக்க பட்டு அனைத்து தொழிற்சாலைகளுக்கும் இலவசமாக தரபடுகிறது

ஒரு நிறுவனத்தின் தொழில் நுட்பம் மற்றவர்களுக்கு தரபடுவதில்லை

12 

கூடுதல் நேர வேலை சம்பளம்

எவ்வளவு நேரம் கூடுதலாக வேலை செய்தாலும் ஓவர் டைம் கூடுதல் சம்பளம் கிடையாது

அங்கீகரிக்கப்பட்ட வேலை நேர்த்திக்கு மேல் சில நிமிடங்கள் வேலை செய்தாலும்  2 மடங்கு கூலி கொடுக்க வேண்டும்

13

தொழிலாளர் நல சட்டம்

தொழிலாளியின் உற்பத்தி திறன் குறைவாக இருந்தாலே வேலையைவிட்டு நீக்கி விடலாம். இதனால் தொழிலாளர் உற்பத்தி திறன் திறமை உயர்வாக இருக்கிறது.

பெரிய தவறுகள் செய்தாலே வேலையை விட்டு நீக்குதல் கடினம். தொழிலாளர் உற்பத்தி திறனை அதிகரிக்கவே முடியாத நிலை. தொழிலாளர் நஷ்டப்பட்டு தொழிற்சாலைகளை மூடும் நிலை ஏற்பட்டாலும் உரிமையாளர் தனது பூர்வீக சொத்துகளை விற்றாவது தொழிலாளர்களுக்கு நஷ்டஈடு கொடுக்க வேண்டிய பரிதாப நிலைமை

 14

குறைந்த பட்ச சம்பளம்

இப்படியொரு சட்டமே கிடையாது வேலை திறனுற்கேற்ப சம்பளம் தான்

தொழிலாளர் மிக குறைந்த அளவு உற்பத்தி செய்பவராக இருந்தாலும் கூடுதலாக நிர்ணயிக்கபட்டுள்ளன

 15

தொழிற்சங்கங்கள்

தொழிற்சங்கங்கள் கிடையாது. எனவே ஸ்ட்ரைக் ஆர்பாட்டம் கொடி பிடித்தல் எதுவும் கிடையாது. ஆகவே சுமுகமாக தொழில் உறவு 

அரசியல் மற்றும் வேறு துறையில் லீடராக உள்ளவர்கள் யூனியன் லீடராக இருந்து தொழிலாளர் சம்பந்தப்பட்ட சிறு பிரச்சனைகளை கூட பெரிதாக்கி விடுவார்கள். அது மட்டுமல்ல சொந்த பிரச்னை கூட ஸ்ட்ரைக் ஆர்பாட்டம் கிளர்ச்சி என ஈடுபடுவதால் உற்பத்தித்திறன் உற்பத்தி அளவு மிகவும் பாதிப்பு

 16

சரக்கு போக்குவரத்து துறை

பொருட்களை டெலிவரி செய்வதற்கு நல்ல ரோடுகள் இடையூறு இல்லாத போக்குவரத்து 800 கி.மீ தூரத்திலுள்ள தொழிற்சாலைகள் 8 மணி நேரத்தில் சரக்கு டெலிவரி

ரோடுகள் மிகவும் மோசம் மும்பையிலிருந்து 800 கி.மீ தூரத்தில் உள்ள ராஜ்கோர்ட்டுக்கு டெலிவரி செய்ய குறைந்த பட்சம் 2 நாள்கள கூட ஆகிறது. விற்பனைவரி செய்ய முடியும். சோதனை சாவடிகள் தமிழ்நாட்டில் மட்டும் தான் எடுக்கப்பட்டு விட்டன மற்றும் பல சோதனை சாவடிகளில் காக்க வைத்தல் எதற்கெடுத்தாலும் சாலை மறியல் வாகனங்கள் எரிப்பு குடும்ப சண்டைகளுக்கு கூட போக்குவரத்து நிருத்தப்படுதல், வாகனங்கள் செதபடுத்துதல்.

 17

மின்சாரம்

ஏற்ற இறக்கம் இல்லாத தொடர்ச்சியான மின் சப்ளை யூனிட் 1க்கு ரூ2.00க்கு கிடைக்கிறது


ஏற்ற இறக்கம் இல்லாத அதிலும் இறக்கம் உள்ள அடிக்கடி தடை படுகின்ற தரம் குறைந்த மின்சாரத்தின் விலை தமிழ்நாட்டில் யூனிட் 1க்கு ரூ4 ஆகிறது

 18

அரசு இயந்திரம்

தொழிற்சாலைகள் குறைந்த அரசு துறைகளின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்றன ஒற்றை சாரள முறை செயல்படுகிறது. அரசு அதிகாரிகள் தொழிற்சாலைகளுக்கு ஊக்கமளிக்கும் விதத்தில் செயல் படுகின்றன

மத்திய சிறுதொழில் இணையமைச்சர் திருமதி. வசுந்தராஜே ஒரு கருத்தரங்கில் கூறியிருப்பது ஒரே நபர பணிபுரியும் சிறு தொழில் அமைப்பில் கூட வரி வசுலுக்கு 37 வகையானஆய்வுகள் மேற்கொள்ளபடுகின்றன. இதற்கு 57 சட்டங்கள் பொருந்துமாறு செய்யபடுகின்றன இவற்றின் அடிப்படையில் 116 படிவங்களும் பதிவேடுகளும் பராமரிக்கபட்டாக வேண்டும் இத்தைகைய நிர்வாக காட்டுக்குள் திக்கு தெரியாமல் சிக்க விட்ட குழந்தை போல சிறு தொழில் துறை ஆபத்தான நிலையில் தள்ளாடி கொண்டிருக்கிறது

19

லஞ்ச ஊழல்

லஞ்சம் சரியான தண்டனைக்குள்ளாகிறது. சமீபத்தில் கூட பல லஞ்ச ஊழல அரசு அதிகாரிகளின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன

சட்ட விதிகளை அரசு அதிகாரிகள் அவர்கள் இஷ்டத்திற்கு வியாக்கியானம் செய்து தொழிலதிபர்களை துன்புறுத்தி பணம் பண்ணுவதிலேயே கண்ணும் கருத்துமாக உள்ளனர். அரசு அதிகாரிகள் வேண்டுமென்றே தவறான விளக்கம் கொடுத்ததாக தெரிந்தாலும் அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க படுவதில்லை. அதிகார துஷ்பிரயோகம் எந்த மட்டத்திலும் கட்டுபடுதபடுவதில்லை

20

துறைமுகங்களின் செயல்பாடுகள்

சுங்கவரி இலாகாவும் துறைமுக நிர்வாகமும் வருடத்தில் 365 நாள்களும் செயல்படுகின்றன. இறக்குமதியான பொருள்களை 24 மணி நேரத்திற்குள் கிளீயர் செய்து விடலாம் சராசரியாக ஏற்றுமதிக்கும் அதே நேரம் தான் அதிகபட்சம்

இந்தியாவில் இவை 250 நாட்களே செயல்படுகின்றன. இறக்குமதியான பொருள்களை கிளீயர் செய்யவே 20 நாட்கள் ஆகின்றன. ஏற்றுமதிக்கு சராசரியாக 10 நாட்கள் ஆகின்றன.
இப்படி நம் நாட்டவர் செய்யும் கொடுமைக்கு அளவே இல்லை...
 

No comments:

Post a Comment