சர்வே டேட்டா சொல்லுது.
நெடுஞ்சாலைப்
பயணங்களின்போது ஹோட்டல்களுக்குச் செல்பவர்களில் 34 சதவிகிதம் பேர் சாப்பிடச் செல்கிறார்கள்.
பாக்கி இருப்பவர்கள் டாய்லெட்டுக்காகச் செல்கிறார்கள்.
97 சதவிகிதம்
மனைவிகள் அலுவகத்தில் இருக்கும் தங்கள் கணவனிடம் கேட்கும்
கேள்வி “வீட்டுக்கு எப்ப வர்றீங்க?” அதில்
57 சதவிகிதம் கணவர்கள் அந்தக் கேள்வி வரும்போது
அலுவலகத்தில் இருப்பதில்லை.
எவ்வளவு
பெரிய சமூகப் பிரச்னையையும் ஒரு
ஸ்டேட்டஸ் போடுவதால் தீர்க்க முடியும் என்று
ஃபேஸ்புக் கணக்கு வைத்திருப்பவர்களில் 48 சதவிகிதம் பேர்
நம்புகிறார்கள்.
பொது இடங்களில் 96 சதவிகிதம் பேர் மொபைல் ஸ்கிரீனைப்
பார்த்தபடிப் பயணிக்கிறார்கள். அதில் 59 சதவிகிதம் பேர் தங்கள் மொபைலையும்,
37 சதவிகிதம் பேர் பக்கத்தில் இருப்பவர்கள்
மொபைல் ஸ்கிரீனையும் பார்க்கிறார்கள்.
வாகன ஓட்டிகளில் 76 சதவிகிதம் பேர் பிரேக் பயன்படுத்த
வேண்டிய நேரங்களில் ஹாரனைப் பயன்படுத்துகிறார்கள்.
காதலர்கள்
தங்கள் சாட்டிங்கில் ‘ம்ம்ம்’ என்பதை 59 சதவிகிதமும்,
அப்புறம்’ என்பதை 37 சதவிகிதமும் பயன்படுத்துகிறார்கள்.
No comments:
Post a Comment