Tuesday, February 13, 2018

பூனைக்குட்டி



பூனைக்குட்டி


மியாவ் மியாவ் பூனைக்குட்டி

மீசை வச்ச பூனைக்குட்டி

பையப் பையப் பதுங்கி வந்து

பாலைக் குடிக்கும் பூனைக்குட்டி

பளபளக்கும் பளிங்குக் குண்டு

பளிச் சென்று முகத்தில் இரண்டு

வெளிச்சம் போடும் விழி கண்டு

 விரைந்தோடும் எலியும் மிரண்டு

விரித்த பூவைக் கவிழ்த்ததுபோல

விளங்கும் பூனைக் காலடிகள்

இருந்து தவ்வ ஏற்றபடி

இயங்கும் சவ்வுத் தசைப்பிடிகள்

அழகு வண்ணக் கம்பளி யால்

ஆடை உடுத்தி வந்தது போல்

வளர்ந்து முடியும் பலநிறத்தில்

வந்து தாவும் பூனைக்குட்டி

விரட்டி விலங்கினைக் காட்டிலே

 வீரங் காட்டும் புலியினமே துரத்தி

 எலியை வீட்டினிலே தொல்லை

தீர்க்கும் பூனை தினமே
 

No comments:

Post a Comment