சவ்வு மிட்டாய்
எண்பதுகளின்
மத்தியில் தென்னக தெருக்களில் அவர்களை
சாதரணமாக பார்க்கலாம்..! கையில் பெரிய உருளை
தடியோடு வருவார்கள். குழந்தைகளின் ஆதர்ஷ நாயகர்கள் அவர்கள்.
அவர்களை தெருக்களில் பார்த்து விட்டால் குழந்தைகள் தங்கள் வீடுகளுக்கு சென்று
வீடிலுள்ளவரிடம் அடம் செய்து காசு
வாங்கி விடுவார்கள்.
உருளைத் தடியின் உச்சத்தில் உள்ள
சவ்வு மிட்டாய்தான் இத்தனைக்கும் காரணம். சென்னையில்
சவ்வு மிட்டாய் என்று பஞ்சு மிட்டாயை
சொல்கிறார்கள்.
ஆனால் நான் குறிப்பிடுவது
சவ்வைப் போல இழுத்தால் நீண்டு
கொண்டே போகும் மிட்டாய். சவ்வு
மிட்டாயில் என்ன விசேஷம் என்று
கேட்குறீர்களா? விசேஷம் அதில்லை.மிட்டாய்
விற்பவரின் கலை கரங்கள்தான் விசேஷம்.
கொஞ்சமே கொஞ்சமாக அந்த உருளை தடியின்
உச்சிலுள்ள சவ்வு மிட்டாயை
எடுத்து குழந்தைகள் என்ன வடிவில் கேட்க்கிரார்களோ
அந்த வடிவில் செய்து தருவார்.
மயில்,கிளி, கை கடிகாரம்,வண்டி,
என பல்வேறு வடிவங்களில் செய்து
நம் கைகளில் ஒட்டிச் செல்வார்.
குழந்தைகளுக்கு உடனே மிட்டாயை சுவைக்க
மனம் வராது.... கைகளில் வைத்து கொண்டே
இருப்பார்கள். பின்பு அரை மனதோடு
சாப்பிடுவார்கள். நானும் சவ்வு மிட்டாயின்
தீவிர ரசிகன்தான். இது போக காசு
மிட்டாய் என்று ஒன்று உண்டு.
அந்த மிட்டாயினுள் காசுகள் இருக்கும் சில
சமயம். அப்புறம் பாக்கு மிட்டாய்,தேன்
மிட்டாய்... இன்று
இவையனைத்தும் கிடைப்பதில்லை...தேன் மிட்டாய் மட்டும்
ஆங்காங்கே தென்படுகிறது.
உருளைத் தடியின் உச்சத்தில் உள்ள சவ்வு மிட்டாய்தான் இத்தனைக்கும் காரணம். சென்னையில் சவ்வு மிட்டாய் என்று பஞ்சு மிட்டாயை சொல்கிறார்கள்.
ஆனால் நான் குறிப்பிடுவது சவ்வைப் போல இழுத்தால் நீண்டு கொண்டே போகும் மிட்டாய். சவ்வு மிட்டாயில் என்ன விசேஷம் என்று கேட்குறீர்களா? விசேஷம் அதில்லை.மிட்டாய் விற்பவரின் கலை கரங்கள்தான் விசேஷம். கொஞ்சமே கொஞ்சமாக அந்த உருளை தடியின் உச்சிலுள்ள சவ்வு மிட்டாயை எடுத்து குழந்தைகள் என்ன வடிவில் கேட்க்கிரார்களோ அந்த வடிவில் செய்து தருவார். மயில்,கிளி, கை கடிகாரம்,வண்டி, என பல்வேறு வடிவங்களில் செய்து நம் கைகளில் ஒட்டிச் செல்வார்.
குழந்தைகளுக்கு உடனே மிட்டாயை சுவைக்க மனம் வராது.... கைகளில் வைத்து கொண்டே இருப்பார்கள். பின்பு அரை மனதோடு சாப்பிடுவார்கள். நானும் சவ்வு மிட்டாயின் தீவிர ரசிகன்தான். இது போக காசு மிட்டாய் என்று ஒன்று உண்டு. அந்த மிட்டாயினுள் காசுகள் இருக்கும் சில சமயம். அப்புறம் பாக்கு மிட்டாய்,தேன் மிட்டாய்... இன்று இவையனைத்தும் கிடைப்பதில்லை...தேன் மிட்டாய் மட்டும் ஆங்காங்கே தென்படுகிறது.
No comments:
Post a Comment