Friday, January 5, 2018

அஜினோமோட்டோ ஆபத்தான அஜினோமோட்டோ


அஜினோமோட்டோ  ஆபத்தான அஜினோமோட்டோ







கடந்த சில ஆண்டுகளாக பிரபலமாகி வரும் அஜினோமோட்டோ என்ற உப்பும் இந்த வகையைச் சேர்ந்ததுதான். இந்த அஜினோமோட்டோவின் விஷத்தன்மை பற்றி இருவேறு கருத்துகள் இருந்தபோதிலும் பல மருத்துவ ஆராய்ச்சிகள் மனிதர்களுக்கு அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு இது பலவித ஆபத்துகளை உருவாக்கும் என்று நிரூபித்துள்ளன.

கருவுற்ற எலிகளுக்கு அஜினோமோட்டோ கலந்த உணவைத் தொடர்ந்து கொடுத்து வந்தால் அவற்றின் குட்டிகளுக்கு மூளைப் பகுதியில் உள்ள செல்கள், அளவில் சுருங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அஜினோமோட்டோ கலந்த உணவுப் பொருட்களை அடிக்கடி சாப்பிடும் குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன் சுரப்பது வெகுவாக குறையும்.

இதனால் உடல் வளர்ச்சி தடைப்பட்டு உயரம் குறைகிறது. மூளை மட்டுமின்றி இரைப்பை, சிறுகுடல், கல்லீரல் போன்ற உறுப்புகளிலும் அழற்சியையும், சிறு ரத்தக் கசிவையும் ஏற்படுத்துகிறது. இதனால் குழந்தைகளுக்குக் காரணம் கண்டுபிடிக்க முடியாத வயிற்றுவலி அடிக்கடி ஏற்படும்.

அஜினோ மோட்டோவைப் பாஸ்ட் புட் கடைகளிலும், ஐந்து நட்சத்திர விடுதிகளிலும் பயன்படுத்தப்படும் ஜீரோ ஏடேட் ஹைட்ரோ ஜெனடேட் என்ற எண்ணெயும், பல்வேறு ஆபத்துக்களை உருவாக்கும் குணம் கொண்டது என்ற தகவல்களையும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment