Monday, January 15, 2018

மெக்ஸிகோ சலவை காரி ஜோக்



 மெக்ஸிகோ சலவை காரி ஜோக்
 
            உங்களுக்கு சுஜாதா அடிக்கடி குறிப்பிடும் மெக்ஸிகோ  சலவை காரி ஜோக்  தெரியுமா ?  அதுக்கு முன்னாடி ,கொஞ்சம் இந்த ஜோக்ஸ் :

கேனடா :
 "என் பொண்டாட்டி மூணு வார டயட்ல இருக்கா!"
"அப்படியா ,எவ்வ்ளோவ்  கொரச்சாங்க?"
"மூணு வாரத்தை ,ரெண்டா கொரச்சுடாங்க"

தாய்லாந்த் :

கிண்டேர்கார்டேன் டீசெர் மாணவ குட்டீஸை பாத்து கத்தினார் "சீக்கிரம் நடங்க ,இல்லன லேட் ஆயிடும் ".
ஒரு சுட்டி "என்ன அவசரம் டீச்சர் ?"
"இப்படி லேட் பண்ணா அடுத்த கிளாஸ் மிஸ் பண்ண வேண்டி இருக்கும் "
சுட்டி தோளை குளிகியபடி, "உங்களுக்கு அவசரம்ன ,நீங்க மட்டும் போங்க மிஸ்"

மெக்ஸிகோ:

செவ் இந்தியர்கள் ,தங்கள் புதிய இனத் தலைவனை பார்த்து , "இந்த வருஷம் வின்ட்டர் ரொம்ப ஜாஸ்தியா இருக்குமா நு?"  கேட்டாங்க.
அந்த தலிவன் அவ்வளவு அனுபவம் இல்லாதனால , "நீங்கல்லாம் குளிர் காய மரத்த சேகரிங்க" அப்படின்னு சொல்லீட்டு, நைசா , வானிலை அறிவுப்பு நிலையத்துக்கு ஒரு போன் செய்து "வின்ட்டர் ரொம்ப கடுமையா இருக்குமான்னு?" கேட்டாரு.   "அப்படிதான் இருக்கும் போல நு " பதில் வந்தது.

உடனே அந்த தலைவன் தன கூட்டத்தை பாத்து "ரொம்ப மரம் வேண்டியுருக்கும் குளிருக்கு ,நெறைய சேகரிங்க" ன்னு உத்தரவிட்டான்.

ஒரு வாரம் கழித்து , மீண்டும் ஒரு கால் பண்ணி கேட்டாரு "உங்களுக்கு நிச்சயமா தெர்யுமா ,வின்ட்டர் ஜாஸ்தி யா இருக்கும்னு ?"

"நிச்சயமா "  வந்தது நிலைய பதில்.

தலிவன் தன் மக்களை பாத்து , "இன்னும் நெறைய மரம் வேண்டி இருக்கும் போல, இன்னும் போயி நெறைய கொண்டு வாங்கனு " சொல்லிட்டான்.

திரும்பியும் ஒரு போன் போட்டாரு கொஞ்ச நாள் கழித்து :
 "சார் , உண்மையாவே குளிர் ஜாஸ்தி யாக போகுதா ?"
"யோவ் ,இது வரைக்கும் ரெகார்ட்ல இல்லாத அளவுக்கு இருக்குமுய்யா" சொன்னங்க நிலையத்தில்.
"அது எப்படி சார் ,ரொம்ப அடிச்சு சொல்றீங்க? " கேட்டான் தலைவன் .
"ஏன்ன, இந்த செவ் இந்திய கூட்டம் ,நெருப்புக்கு மரத்த ,ஓவரா சேகரிக்கிறத வச்சு சொல்றோம்யா "



            தலிவர் சுஜாதா சொன்ன அந்த ஜோக் சத்தியமா எனக்கு தெரியாது. அவர் சொல்லுவாரு சொல்லுவாருன்னு பாத்தா சொல்லாமலே போனாரு மவ ராசரு.  உங்களுக்கு தெரிஞ்சதுன்ன , கமெண்ட் போடுங்க ப்ளீஸ்.

 

No comments:

Post a Comment