Tuesday, January 30, 2018

கபில முனிவர்



கபில முனிவர்


கபில முனிவர் கடவுளால் படைக்கப்பட்ட சித்த சக்தி கொண்ட முனிவர். கபில முனிவர் மகாவிஷ்ணுவின் 24 அவதாரங்களில் ஒரு அவதாரமென்றும், அதுபோல வெவ்வேறு சூழ்நிலையில் கபிலமுனிவர் அக்னியின் அவதாரமாகவும், சிவபெருமானின் அவதாரமாகவும் தோன்றியிருக்கிறார் . பிரம்ம தேவனின் நிழலில் இருந்து உருவாகிய கர்தாம் என்பவருக்கும் அவருடைய மனைவி தேவயுவதிக்கும் கபிலர் மகனாக பிறந்தார் . மகன் பிறந்ததும் கர்தாம் தம்பதியர்கள் சித்தபுர் என்ற இடத்திலுள்ள ஆசிரமத்தில் தங்கினார் . கபிலர் பிறந்ததும் பிரம்மதேவன் கர்தாமுக்கு பகவானே ஜனனம் எடுத்ததாகச் சொன்னார் . மேலும் கபில முனிவர் சமக்கிய சாஸ்திரத்தை உருவாக்குவார் என்று பிரம்மதேவன் சொல்லிவிட்டு மறைந்தார் . கபிலமுனிவர் வளர வளர அவருடைய தந்தை சந்நியாசம் பெற்றுக் கொண்டு காட்டிற்கு சென்றார் . சில நாட்கள் கழித்து காட்டிலேயே கபிலரின் தந்தை உயிர் நீத்தார் . அதன்பிறகு கபில முனிவர் தன்னுடைய அன்னையுடன் சரஸ்வதி நதிக்கரை ஓரத்தில் ஆசிரமத்தை அமைத்துக் கொண்டு தங்கினார் . ஒருநாள் பிரம்மதேவன் தோன்றி தேவயுவதியிடம், அவளுடைய மகன் கபில முனிவர் அவளிடம் அல்லது மக்களிடம் இருக்கும் அறியாமையை அழித்து தன்னிடமிருக்கும் ஞானத்தை எடுத்துரைப்பார் என்று சொல்லிவிட்டு மறைந்தார் . பிரம்மதேவன் கூறிய படியே கபில முனிவர் தியானம் செய்தார் . தன்னுடைய ஞானத்தின் மூலம் மக்களுடைய அறியாமையை அகற்றினார். இயற்கை, ஆதமா இரண்டும் ஒரு சக்தியால் பிணைக்கப்பட்டிருக்கிறது என்பதை மக்களக்கு உணர்த்தினார் . தன்னுடைய ஞானத்தால் சமக்கிய சாஸ்திரத்தை படைத்தார் . கபில முனிவர் தாயினுடைய அனுமதியோடு கடுந்தவம் செய்ய கங்கையை தாண்டி காட்டுப் பகுதிக்குள் நுழைந்தார் . பின்பு கபில சூத்திரம் என்ற நூலையும் இயற்றினார் .
 

No comments:

Post a Comment