ஒருவர்
கேட்கும் போது கற்றுக் கொண்ட
வித்யாவை சொல்லித் தராமலிருப்பது அதர்மத்துக்கு துணை செல்வதென்று ததீச்சர்
கருதினார் . இந்திரனுடைய ஆணையை அறிந்த அஸ்வினி
குமாரர்கள் ததீச்ச்சரின் தலையை எடுத்து அவருக்கு
குதிரைத் தலையை பொருந்தினார்கள். அதன்
பிறகு ததீச்சர் பிரம்ம வித்யாவை அஸ்வினி
குமாரர்களுக்கு கற்றுக் கொடுத்தார் .
இதை அறிந்த இந்திரன் கோபம்
கொண்டு ததீச்ச்சரின் குதிரை தலையை வெட்டி
எறிந்தார் . அஸ்வினி குமாரர்கள் ததீச்சருக்கு
மீண்டும் அவருடைய தலையை பொருந்தினார்கள்
. இதனால் ததீச்சர் அஸ்வஹீரா என்று மற்றோரு பெயரால்
அழைக்கப்படுகிறார் . மகரிஷி ததீச்சர் தகஷ்
மகாராஜா நடத்தும் யாகத்திற்கு மருமகன் சிவபெருமானை அழைக்கும்படி
அவரிடம் கேட்டுக் கொண்டார் . தகஷானோ மகரிஷியின் வேண்டுகோளை
அவமதித்ததால் ததீச்சர் யாகத்தை விட்டு வெளியேறினார்
.
இந்திரனுக்கும்
பிரகஸ்பதிக்கும் மனபேதம் தோன்றியது . இதனை
சாதகமாக எடுத்துக் கொண்டு அசுரர்கள் தேவர்களைத்
தாக்கினார்கள் . அசுரர்களுக்கு பயந்து இந்திரன் பிரம்மனிடம்
அடைக்கலமடைந்தார். அந்த அராஜகத்தை ஒழிக்க
பிரம்மன் தவ்ஸ்தனின் மகன் விஸ்வரூபனை பூசாரியாக
தோற்றுவித்து யாகத்தை நடத்தினார் . விஸ்வரூபனின்
தாயார் அசுர பரம்பரையைச் சார்ந்தவர்
.
விஸ்வரூபன்
யாகத்தின் பிரசாதத்தை தாயாருக்கு கொடுத்தார் . விஸ்வரூபன் கொடுத்த பிரசாதத்தை அவனுடைய
தாயார் சாப்பிட்டவுடன் அசுரர்களின் பலம் கூடியது . இதை
அறிந்த இந்திரன் விஸ்வரூபனை கொன்றான் . மகன் இறந்த செய்தியை
அறிந்த தவ்ஸ்தன் வரத்தா என்கிற அசுரனை
உருவாக்கினார் . அவனுடைய கொடுமையை தாங்க
முடியாமல் இந்திரன் பிரகஸ்பதியின் உதவியை நாடினார் . பிரகஸ்பதி
ததீச்சரின் எலும்பினால் உருவாக்கப்பட்ட வஜ்ராயூதத்தால் அந்த அசுரன் கொல்லப்படுவான்
என்ற பரிகாரத்தை சொன்னார் .
இந்திரன்
ததீச்சரைத் தேடி நைமிசாரன்யத்திற்கு சென்றார்
. இந்திரன் ததீச்சரிடம் அவருடைய எலும்பை தானமாக
கேட்டார் . ததீச்சரின் கடைசி ஆசையை நிறைவேற்றிய
இந்திரன் அவருடைய எலும்பை பெற்றுக்
கொண்டார் . இந்திரன் ததீச்சரின் எலும்பினால் வஜ்ரா யூதத்தை உருவாக்கி
வரத்தா அசுரனைக் கொன்றார் .
No comments:
Post a Comment