ஸ்வாமி விவேகானந்தர்
வாரனாசியிலுள்ள
மகாதேவரின் அருளால் கொல்கத்தாவிலுள்ள விஸ்வநாத்
-விஸ்வேஷ்வரி தம்பதியருக்கு 1863 ஆம் ஆண்டு ஜனவரி
12 ஆம் திகதியன்று நரேந்திரதத் என்ற பாலகன் பிறந்தார்
. கல்வி, கலை , பக்தி ஆகியவற்றில்
திறமையைப் பெற்ற நரேந்திரதத் படிக்கும்போது
பல கேள்விகளை எழுப்பி ஆசிரியரை விந்தையில்
ஆழ்த்தினார் . நரேந்திரதத் சட்டப் படிப்பு படித்துக்
கொண்டிருக்கும் சமயத்தில் ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்தித்தார் . நரேந்திரதத் "இறைவனை பார்த்ததுண்டா ?" என்ற கேள்வியை
பரமஹம்சரிடம் கேட்டார் . நரேந்திரதத் கண்களில் தெரிந்த தேஜஸானஒளியை அறிந்து
கொண்ட பரமஹம்சர் அவரை தன்னுடைய சிஷ்யராக்கிக்
கொண்டார் . அவரிடமிருந்து ஆன்மீக சன்மார்க்கத்தைக் கற்றுக்
கொண்டார் .
செல்வம்
, பெண் , பதவி ஆகியவற்றில் ஏங்குபவன்
சாதாரண மனிதனாவான் . ஆனால் எவனொருவன் இறைவனுக்காக
ஏங்குகிறானோ அவன் எதிரே இறைவன்
தோன்றுகிறார் என்று நரேந்திரதத் கேட்ட
கேள்விக்கு சற்றுகூட சலமில்லாமல் பரமஹம்சர் பதில் கொடுத்தார் . நரேந்திரனுக்கு
ராம மந்திர திக்ஷதையை அளித்த
பரமஹம்சரின் ஆத்மா அவருடைய உடலைவிட்டு
பிரிந்து ஒளிவடிவமாக நரேந்திரதத்தின் ஆத்மாவோடு கலந்தது . அன்றிலிருந்து அவர் ஸ்வாமி விவேகானந்தா
என்ற பெயரால் உலகத்திற்கு அறிமுகமானார்
. உலகப் பயணத்தை மேற்கொண்ட ஸ்வாமி
விவேகானந்தர் பேச்சுத் திறமையால் இந்து மதத்தின் மகிமையை
எடுத்துரைத்தார் . உலக மக்களோடு ஞானம்,
பக்தி ஆகிய இருமார்க்கத்தின் பெருமையையும்
, அருமையையும் பகிர்ந்து கொண்டார் . சர்க்கரை நோய்க்கு ஆளாகிய ஸ்வாமி விவேகானந்தர்
1902 ஆம் ஆண்டு பிப்வரி மாதத்தில்
மகாசமாதி
பெற்றார் .
No comments:
Post a Comment