Friday, January 5, 2018

மூளையைப் பலமாக்கும் மஞ்சள்


மூளையைப் பலமாக்கும் மஞ்சள்


மஞ்சளுக்கும் பெண்களுக்கும் நிறையவே தொடர்புகள் உண்டு. அவர்கள்தான் இந்த மஞ்சளை, தங்கள் உடல் அழகுக்காகவும் பயன்படுத்துகிறார்கள்; கமகம சமையலிலும் உபயோகிக்கின்றனர்.

இதே மஞ்சளுக்கு மூளையை பலமாக்கும் `பவர்இருப்பதாக கண்டறிந்து இருக்கிறார்கள் வட கரோலினா பல்கலைக்கழக பேராசிரியர்கள்.அதாவது, சமையலுக்காக பயன்படுத்தும் மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்கிற உட்பொருள் அல்சைமர் மற்றும் டெமெண்டியா என்கிற மூளை சம்பந்தப்பட்ட மற்றும் நினைவாற்றலை குறைக்கும் நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டிருப்பது இந்த ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆய்வு முடிவு குறித்து ஆய்வாளர்கள் கூறும்போது, `மூளைக்குள் இருக்கும் நரம்பு மண்டலத்தில் உருவாகும் ஒருவகை புரோட்டீன், அமிலத்தன்மையின் பரவல் காரணமாக நினைவாற்றலை இழக்கிறது. மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்கிற உட்பொருள் இந்த புரோட்டீன் அமிலத்தன்மையின் பரவலை தடுக்கும் சக்தியை பெற்றிருப்பது எங்கள் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளதுஎன்று தெரிவித்தனர்.

ஒரு வாரத்தில் குறைந்தது மூன்று முறை மஞ்சள் கலந்த குழம்பை உணவில் சாப்பிடுபவர்களுக்கு மூளை மற்றும் நினைவாற்றல் குறையும் நோய்கள் தாக்குவதற்கான வாய்ப்புகள் குறைவதாகவும் அப்போது அவர்கள் தெரிவித்தனர்.

மஞ்சளை சமையலில் பயன்படுத்தும் வழக்கம் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் மட்டுமே இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment