விண்ணைத்தொடும் விலைவாசி...
விளை
நிலங்களை எல்லாம் வீட்டு மனையாக
ஆக்கியதன் விளைவு இப்பொழுது தான்
மெல்ல மெல்ல தலை தூக்குகிறது
விலை வாசி உயர்வு என்ற
பிரச்சனையாக. தமிழகத்தில் முப்போகம் விளையும் விளை நிலங்களை எல்லாம்
வீட்டு மனையாக ஆக்கி ரியல் எஸ்டேட்
என்ற பெயரில் நிலத்தின் விலையை
அதிகப்படுத்தி நிறைய இடங்களில் விற்பனை
செய்யப்பட்டது செய்யப்படுகிறது. இதற்கு ஒரு சில
சமூக ஆர்வலரிடம் எதிர்ப்பு இருந்த போதிலும் பொதுமக்கள்
வீட்டு மனை வாங்கும் ஆர்வத்தால்
எதிர்ப்புக்கள் அனைத்தும் அமுங்கிவிட்டது. இன்று தமிழகத்தில் கொடி
கட்டி பறக்கும் வியாபாரமே வீட்டு மனை விற்பனை
தான்.
வீட்டு மனை வியாபாரத்தால்
விவசாய உணவுப்பொருட்களின் உற்பத்தி குறையும் அடுத்த 5 ஆண்டுகளுக்குப்பின் சாப்பாடுக்கு வழி இருக்காது என்று
பேச்சு இருந்து வரும் இந்நேரத்தில்
கடந்த இரண்டு மாதங்களாக தமிழகத்தில்
மழை பெய்தது இதனால் விளைநிலங்கள்
பாதிக்கப்பட்டது பொருட்களின் உற்பத்தி குறைந்தது தேவை அதிகரித்தது. இது
தான் சமயம் என விலையை
ஏற்றி விட்டனர் இதனால் நடுத்தர வர்க்க
மக்கள் இன்று யாரும் காய்
கறிகள் வாங்க கூடிய நிலைமை
இல்லை என்றாகி விட்டது. இந்த
விலை ஏற்றத்திற்கு பின்னால் சற்று யோசித்தமேயானால் இது
மழையால் வந்த விலை ஏற்றம்
இல்லை. உற்பத்தி குறைந்ததால் வந்த விலை ஏற்றம்
தான். விலை ஏற்றத்திற்கான காரணங்களில்
இதுவும் ஒன்று.
இன்னும்
5 ஆண்டுகளுக்கு பின் இருக்க வேண்டிய
விலை இன்று இருக்கின்றது வெங்காயம்
கிலோ 150 ரூபாய், தக்காளி 80 என்ற
தினமும் மக்கள் பயன்படுத்தும் பொருட்களின்
விலை விண்ணைத்தொடுகிறது. சைவ உணவு சாப்பிடும்
பழக்கம் மறந்து விடும் அளவிற்கு
இருக்கிறது இன்று மலையில் பயிரிடப்படும்
காய்கறிகள் எல்லாம் குறைந்த பட்ச
விலை 50யைத் தாண்டுகிறது.
சிக்கன்,
மீன், மட்டன் விற்கும் விலைக்கு
இன்று காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன. வாரத்திற்கு
ஒரு நாள் தான் சிக்கன்,
மட்டன் எடுப்போம் மற்ற நாட்களில் சைவ
உணவுதான். இவ்விலை ஏற்றத்தால் பெரிதும்
பாதிக்கப்படுவது நடுத்தர வர்க்கத்தினரும், வறுமைக்
கோட்டுக்கு கீழ் இருப்பவர்களும் தான்.
ஒரு காலத்தில் 100 ரூபாய் கொண்டு போனால்
ஒரு பை நிறைய காய்கறிகள்
வாங்கி வரலாம் இன்று 1000 ரூபாய்
கொண்டு போனாலும் ஒரு பை நிறைய
வாங்கி வர முடியாது என்பது
தான் நிலைமை.
விலை
வாசி உயர்ந்த அளவிற்கு பொதுமக்களுக்கு
கூலி, சம்பள உயர்வு இல்லை
அதே கூலி தான் வழங்கப்படுகிறது.
இன்றைய நிலைமைக்கு பொதுமக்கள் காய் கறிகள் சமைப்பதை
விட வீட்டில் எழுமிச்சை, தயிர், புளி சாதம்
போன்றவற்றிக்கு சமைப்பதால் காய்கறி விலையில் இருந்து
கொஞ்சம் தப்பிக்கலாம். இந்த உணவு வகைகள்
தான் ஓரளவிற்கு விலை குறைந்த பொருட்களை
கொண்டு உணவு தயாரிக்க ஏதுவாக
இருக்கும். ஏறி வரும் விலை
வாசியை சமாளிக்க இந்த மாதிரி உணவுக்கு
மாறிக்கொள்ள வேண்டும்.
ஒரே ஒரு இடத்தில் விலை உயர்வதால் அதைப்பின்பற்றி அனைத்து உணவுப்பொருட்கள் மற்றும் அத்தியாவிசயத் தேவையான பொருட்களின் விலை பன்மடங்கு உயருகிறது. விலைவாசியை கட்டுப்படுத்த இறக்குமதியை அதிகப்படுத்தாலம் ஆனால் அதிலும் பல சிக்கல்கள். இன்னும் 2 நாளில் விலை குறைந்து விடும் 4 நாளில் குறைந்து விடும் என்று அறிக்கை மட்டுமே விடுகின்றனர் குறைந்தபாடில்லை.
ஒரே ஒரு இடத்தில் விலை உயர்வதால் அதைப்பின்பற்றி அனைத்து உணவுப்பொருட்கள் மற்றும் அத்தியாவிசயத் தேவையான பொருட்களின் விலை பன்மடங்கு உயருகிறது. விலைவாசியை கட்டுப்படுத்த இறக்குமதியை அதிகப்படுத்தாலம் ஆனால் அதிலும் பல சிக்கல்கள். இன்னும் 2 நாளில் விலை குறைந்து விடும் 4 நாளில் குறைந்து விடும் என்று அறிக்கை மட்டுமே விடுகின்றனர் குறைந்தபாடில்லை.
விலை ஏற்றத்திற்கு முக்கிய
காரணங்களில் ஒன்று ரியல் எஸ்டேட்.
விளைநிலங்களை வீட்டுமனை ஆக்க அனுமதிக்கக்கூடாது. எது
எதுக்கோ கட்டுப்பாடுகள் விதிக்கும் அரசு இந்த வீட்டுமனை
விற்பனைக்கும் விதித்தால் விவசாயத்தை முன்னிறுத்த உதவும்.
No comments:
Post a Comment